உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காம்பவுண்ட் சுவர் பழுது கண்ணுக்கு தெரியலையா? ரீல்ஸ் போட்ட திமுக எம்எல்ஏ.,வை வெளுக்கும் நெட்டிசன்கள்

காம்பவுண்ட் சுவர் பழுது கண்ணுக்கு தெரியலையா? ரீல்ஸ் போட்ட திமுக எம்எல்ஏ.,வை வெளுக்கும் நெட்டிசன்கள்

நமது சிறப்பு நிருபர்

சென்னை: திருவள்ளூரில் சுவர் இடிந்து மாணவன் பலியான பள்ளிக்கு, சில தினங்களுக்கு முன் ஆய்வுக்கு போன திமுக எம்எல்ஏ., 'முதல்வர் யார், துணை முதல்வர் யார்' என்றெல்லாம் மாணவர்களிடம் கேள்வி கேட்டு ரீல்ஸ் வெளியிட்டார். இப்படியெல்லாம் செய்யத்தெரிந்த எம்எல்ஏ.,வுக்கு பழுதான காம்பவுண்ட் சுவர் தெரியவில்லையா? என இணையவாசிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.திருவள்ளூர் அருகே ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கொண்டாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்த மாணவன், மதிய உணவு சாப்பிடும்போது, சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானான். பராமரிப்பில் அரசு காட்டிய அலட்சியமே உயிர்பலிக்கு காரணம் என, மாணவரின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bt5wap3h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த பள்ளிக்கு சில நாள் முன் ஆய்வுக்கு திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன் சென்று இருந்தார். மாணவர்களிடம், கேள்விகளை கேட்டு அதை ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த வீடியோவில் மாணவர்களிடம், முதல்வர் பெயர் என்ன? துணை முதல்வர் பெயர் என்ன, கல்வி அமைச்சர் யார் என்றெல்லாம் கேட்டு இருந்தார். அவரது கேள்வி, மாணவர்களின் பதில்களை ரீல்ஸ் வீடியோவாக தயார் செய்து இணையத்தில் வெளியிட்டிருந்தார்.இப்போது அந்த வீடியோவை பகிர்ந்து இணையவாசிகள், எம்எல்ஏ.,வை விமர்சிக்கின்றனர்.https://www.instagram.com/reel/DSIQ35BExUG/?utm_source=ig_web_button_share_sheet ''பள்ளிக்கு ஆய்வு சென்ற எம்எல்ஏவுக்கு, காம்பவுண்ட் சுவர் பழுதாகி இருந்தது தெரியவில்லையா? அதை சற்று கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து இருந்தால், இந்த துயர சம்பவம் நிகழ்ந்து இருக்காது, பள்ளிக் கூடத்திற்குச் சென்று ரீல்ஸ் மட்டும் எடுக்காமல் மாணவர்கள் நலன் கருதி, நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்த வேண்டும்'' என கருத்துகளை இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

metturaan
டிச 18, 2025 10:16

இதுதாண்டா திராவிட மாடல் ஆட்சி... எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாது.... வாழ்க திராவிஷமாடல்...


Ganapathi Amir
டிச 17, 2025 18:31

எத்தனை பள்ளிக்கட்டிடங்கள் திறக்கும் முன்னே இடிந்து விழுந்திருக்கின்றன..? ஒவ்வொன்றுக்கும் எத்தனையெத்தனை லட்சங்கள் கணக்கெழுதப்பட்டுள்ளன..அந்த கட்டிடங்களை கட்டியவர்கள் மேல் எத்தனை வழக்குகள் போடப்பட்டுள்ளன..இது சம்பந்தமாக சற்று மக்கள் சிந்திக்க வேண்டும்..


kjpkh
டிச 17, 2025 18:12

எங்களுக்கு இதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி அப்பா இது


Kali App
டிச 17, 2025 15:15

அங்க ஒரு கருணாநிதி சில வேணும் அப்பாவோட அப்பா


angbu ganesh
டிச 17, 2025 14:22

ஏம்பா சும்மா பொலம்பனும் இவனுங்கள தூக்கி போடணும் 2026 ல அத செய்யுங்க இனி தீயமுக்கவிற்கு எங்கள் வோட்டு இல்லேன்னு ஏன்டா சென்னை ஏர்போர்ட்டு பக்கத்துல முஸ்லிம்கள் தங்க அவங்க நமாஸ் படிக்க கோடிக்கணக்கில் செலவு பண்ணி தாங்கும் விடுதி கட்டி கொடுத்திருக்கியே எங்களுக்கு திருப்பர்ங்குன்றத்துல தீபம் ஏற்ற கூட தடை விதிக்கற,


duruvasar
டிச 17, 2025 14:22

உதயநிதிக்கு பின்பு யார் திமுகவின் முதன்மந்திரி என கேட்டிருக்கலாம். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஐயா இன்னும் பெருமையையும் பொறாமையையு ம் பெற்றிப்பார். பொழைக்க தெரியாத மக்கள் பிரிதிநிதி


Kasimani Baskaran
டிச 17, 2025 14:15

சுவர் ஏன் இடிந்து விழுந்தது என்று கேள்வி கேட்கவேண்டும். அதை விட்டுவிட்டு வெட்டிக்கதை பேசி ஒரு பயனும் இல்லை.


Field Marshal
டிச 17, 2025 14:05

கேட்காமல் விட்டது ..டாஸ்மாக் கடை திறக்கும் நேரம் என்ன ? மூடும் நேரம் என்ன ? ஆண்டுக்கு எத்தனை கோடி விற்பனை ? என்றெல்லாம் கேட்டிருக்கலாம் ?


சமீபத்திய செய்தி