உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓரங்கட்டப்படுகிறாரா அண்ணாமலை?

ஓரங்கட்டப்படுகிறாரா அண்ணாமலை?

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், கட்சி வளர்ச்சி பணியில் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் மெத்தனமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6abfk871&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக, 66 மாவட்டங்களாக செயல்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. அதிக ஆதிக்கம் தேர்தலை எதிர்கொள்ள, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில், ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கட்சி வளர்ச்சி பணிகள் முழு வேகத்தில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ.,வில் நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களுக்கு வேண்டிய கட்சியின் மூத்த தலைவர்கள் எங்கு செல்கின்றனரோ, அவர்களுடன் செல்வது, அதை புகைப்படம் எடுத்து, சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது உள்ளிட்ட பணிகளில் மட்டுமே, கவனம் செலுத்துகின்றனர்.

செல்வாக்கு இல்லை

இதற்கிடையே, தமிழக பா.ஜ.,வின் பல்வேறு பிரிவுகளுக்கு 25க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதில், அண்ணாமலை ஆதரவாளர்களாக இருந்த பெரும்பாலானோர் புறக்கணிக்கப்பட்டனர். இப்படி நியமிக்கப்பட்ட கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கு, தொண்டர்களிடம் செல்வாக்கு இல்லை. அதனால், அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், கட்சியினர் பங்கேற்பதை தவிர்த்து வருகின்றனர். இதனால், மொத்த கட்சியும் செயல்பாடின்றி சுணக்கமாகி உள்ளது. இது தொடர்பான செய்திகள், மத்திய உளவுத்துறை அதிகாரிகள் வாயிலாக மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கும் சென்றுள்ளது. அவர் பார்த்து ஏதும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, வரும் சட்டசபைத் தேர்தலை தமிழக பா.ஜ., தெம்பாக சந்திக்க முடியும்; இல்லாவிட்டால், லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெற்ற ஓட்டுகளில் மிகப்பெரிய சரிவு ஏற்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், அண்ணாமலையை மிகக் கடுமையாக எதிர்க்கும் தமிழக பா.ஜ., துணைத் தலைவர் ராமலிங்கம் கூறியதாவது: பா.ஜ.,வில் முதலாளி போன்று இருந்தவர்கள், மீண்டும் அதுபோல தங்களையே முன்னிலைப்படுத்த வேண்டும் என நினைக்கின்றனர்.அப்படியெல்லாம் செய்ய முடியாது. இதெல்லாம் அதிகாரிகளாக இருந்தவர்களுக்கு புரியாது. ஏனென்றால், இன்றுவரை, அதிகார தோரணையிலேயே இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 152 )

Shravan
செப் 30, 2025 00:27

தமிழ்நாட்டில் அண்ணாமலை இல்லை என்றால் பிஜேபி இல்லை


தலைவன்
அக் 06, 2025 15:15

சரி தமிழகத்தில் பிஜேபி எப்பவுமே இல்லை.


Moorthy
செப் 20, 2025 15:31

அதிமுக பிஜேபி கூட்டணி 2026 இல் படுதோல்வி அடையும். நான் ஒரு சஙகி ஆனால் நான் விஜய்க்குத்தான் ஒட்டு போடுவேன் . திமுக கூட்டணியை டி வி கே தான் வீழ்த்த முடியும் இ பி எஸ் ஒரு செல்லாக்காசு... அண்ணாமலை இல்லா பிஜேபி 2.5 % வோட்டுதான் வாங்கும்


தலைவன்
அக் 06, 2025 15:17

சுத்தம். எச் ராஜாற்கு வோட்டு இல்லையா??


திகழ்ஓவியன்
செப் 17, 2025 14:15

ஓவர்


தலைவன்
அக் 06, 2025 15:18

கதம் கதம்.


sivakumar Thappali Krishnamoorthy
செப் 16, 2025 15:38

அண்ணாமலை அவர்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் பி ஜே பி கிடையாது. அண்ணாமலை இல்லாத பி ஜே பி க்கு வோட்டு போட சொல்ல பிரியம் இல்லை.


saravan
செப் 15, 2025 11:54

மொத்தத்தில் தமிழக பாஜக அதிமுக விற்கு பி டீம் ஆகவும் திமுக விற்கு சி டீம் ஆகவும் மாறிப்போனது


நிக்கோல்தாம்சன்
செப் 15, 2025 02:56

ராமலிங்கம் நீ யாரென்றே தெரியாததா , ஒருவேளை ரியல் எஸ்டேட் ப்ரோக்கரா ? இங்கே பலரும் படித்த பண்பான அண்ணாமலை அவர்களின் பின்னல் செல்லும் இளைஞர் கூட்டம் , உன்னால் பாஜக சிதைக்கப்படும் என்றே தோன்றுகிறது .


தலைவன்
அக் 06, 2025 15:18

பாருடா?? கள்ளலிங்கத்திற்கு பிறந்த சன்னுக்கு கோவத்தை??


C. Sorna Rajeswari
செப் 14, 2025 17:09

சிலருக்கு பட்டால் தான் புத்தி வரும். அண்ணாமலை தலைவராக இல்லாமல் தோற்று விடுவோம் என்று தெரிந்து தான் இங்குள்ள சிலர் 2029 தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று சொல்லி வருகின்றனர். முடிந்தால் எடப்பாடியிடம் 10 சீட் வாங்கி 2 சீட் நயினார் தலைமையில் ஜெயித்து காண்பிக்கட்டும்.


Rajagopalan R
செப் 14, 2025 06:42

ADMK BJP கூட்டணியில் இருந்து வெலியே வந்து விஜய் போன்றோருடன் கூட்டணி வைத்தால்தான் ஜெயிக்க முடியும். அண்ணாமலை போனவுடன் கட்சி அய் சி யு வில் போய்விட்டது. ப ம க வும் உடைந்துவிட்டது.


rama adhavan
செப் 14, 2025 02:52

அப்போ இனி தமிழக பிஜேபி மீண்டும் பெட்டிக்குள்தான். யாராலும் உயிர்ப்பிக்க முடியாது. இக்கட்சி தமிழகத்தில் இருப்பது அண்ணாமலையால் தான் மக்களுக்குத் தெரிந்தது. இனி மறையும்.


BalaG
செப் 14, 2025 01:16

பா ஜ க மேல் கொஞ்சம் நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு வந்ததே அண்ணாமலை வந்த பிறகுதான். அதையும் எந்த மூடர்களின் பேச்சை கேட்டு தவறான நோக்கி போகிறார்கலோ. அண்ணாமலையின் கடினமான உழைப்பும், தைரியமும் வேறு யாரிடமும் எதிர் பார்க்க முடியாது. சில நேரங்களில் அதிக பேச்சுதான். ஆனால் அதிக ஊழல் இல்லையே? மூடர்களுக்கும் மூடர்கள் போல் நடிப்பவர்களுக்கும் அண்ணாமலை மாதிரி ஆட்கள்தான் வேண்டும். இளைஞர்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையே அண்ணாமலைதான். ரஜினி அரசியல் வந்தால் கூட மக்களுக்கு இவ்வளவு பெரிய நம்பிக்கை வந்திருக்காது. மீண்டும் அண்ணாமலை வந்தால்தான் பா ஜ க வை மக்கள் நம்புவர்


முக்கிய வீடியோ