உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதி துணை முதல்வரா? செல்லுார் ராஜு வருத்தம்

உதயநிதி துணை முதல்வரா? செல்லுார் ராஜு வருத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: “நேற்று வரை சினிமாவில் நடித்த உதயநிதி, இன்று துணை முதல்வராகிறார் என்றால், அது தி.மு.க., குடும்பத்தில் மட்டும்தான் நடக்கும்,” என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு வருத்தமாக பேசினார்.

மதுரையில், அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:

'எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அ.தி.மு.க., 10 நாட்கள் கூட இருக்காது' என கூறியவர் கருணாநிதி. ஆனால், ஒரே கையெழுத்தில் 22,000 ரேஷன் கடைகளை ஏற்படுத்தி, மக்களுக்கு இலவச அரிசி வழங்கியவர் எம்.ஜி.ஆர்., பல நலத்திட்டங்களை மக்களுக்கு செய்ததால் தான், இன்றும் அவர் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.அதுபோல், 'பழனிசாமி ஆட்சியும் நிலைக்காது' என்று பலரும் ஆட்சிக்கு ஆயுள் குறித்தனர். ஆனால், எல்லாருடைய எதிர்பார்ப்பு; கணக்குகளையெல்லாம் உடைத்து, நான்கு ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக ஆட்சி நடத்தினார். 2026ல் பழனிசாமி தான் முதல்வர்.மக்களுக்கு விரோதமாக அனைத்தையும் செய்து விட்டு, தற்போது தி.மு.க., ஷூட்டிங் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இதுவரை, முதல்வர் ஸ்டாலின் நான்கு முறை வெளிநாடு சென்றுள்ளார். முதலீடுகளை ஈர்க்கப்போவதாகச் சொன்னார். என்ன முதலீடுகள் ஈர்க்கப்பட்டன என அவரால் சொல்ல முடியுமா?அப்பா கருணாநிதி என்ற அடிப்படையில் மகன் ஸ்டாலின் முதல்வராகி உள்ளார். அதுபோல் நேற்றுவரை சினிமாவில் நடித்த உதயநிதி, தற்போது அமைச்சராக உள்ளார். 'நான் பதவிக்கு வர மாட்டேன்' எனக் கூறிய உதயநிதி, தற்போது சட்டசபைக்குள் வந்தாலே சீனியர் அமைச்சர் உட்பட எல்லாரும் எழுந்து நிற்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

MADHAVAN
செப் 21, 2024 20:28

திடீர்னு முதல்வர் ஆன எடப்பாடி கிட்ட கேளுங்க


ramesh
செப் 21, 2024 12:34

திராவிட ஒழிப்பு காசிமணி ஆசை .தாங்கள் எப்போதும் இலவு காத்த கிளி தான்


Kasimani Baskaran
செப் 21, 2024 09:57

சொல்லவே இல்லை - முன்னரே தெளிவு படுத்தி இருக்கலாம்..


Duruvesan
செப் 21, 2024 09:30

ஜனங்க ஓட்டு போட்டாங்க, அவங்க என்ன வேணா பண்ணுவாங்க


angbu ganesh
செப் 21, 2024 09:24

உள்கட்சி விவகாரமா சார் தமிழ் நாட்டு மக்கள் வோட்டு போட்டு வந்தவங்க, மக்களிடம் கருத்து கேக்கணும் அதுவும் வேஸ்ட் தான் இவனுங்களுக்குள்ளா ஆளுங்கள செட் பண்ணிட்டு அதிலேயும் பிராடு தானம் பண்ணுவானுங்க


Iyer
செப் 21, 2024 08:24

பேராசை பிடித்த குடும்ப கட்சிகள் - நிச்சயமாக வீழும். டெல்லியில் தாய் மகன் கட்சி பதவி இழந்து இருவரும் சிறை செல்லும் நேரம் வண்டாகிச்சு. பிஹாரில் லாலு குடும்பத்தோடு சிறையில் களி தின்னப்போவது உறுதி. உபி யில் யாதவ் குடும்பம் பதவி இழந்துள்ளது. தெலிங்கானாவில் ராவ் குடும்பம் . இப்போதைக்கு ஊழலும் தன்னலமும் இன்றி நாட்டுப்பற்றுடன் உழைக்கும் ஒரே கட்சி பிஜேபி தான்.


Indian
செப் 21, 2024 14:28

00


Bhaskaran
செப் 21, 2024 08:21

உதயநிதி தகுதி உள்ளவரா இல்லாதவரா என்பது வேறு விஷயம் துணை முதல்வர் பதவி அவங்க உள்கட்சி விவகாரம் அதில் கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை


S.L.Narasimman
செப் 21, 2024 07:59

எடப்பாடியார் விவசாயிகளுக்கும் அடிதட்டு எளிய மக்களுக்கும் உதவுவதாக சிறப்பான ஆட்சியைதான் தந்தார் . மறுப்பதற்கு இல்லை. தமிழ்நாட்டு மக்கள் பணம் ஊழல் சாராயம் பிரியாணிக்கு சோரம் போனதால் கருணாநிதி சார்ந்த குடூம்பம் இன்னும் சிலபல ஆண்டுகள் ஈருப்பார்கள்.


Barakat Ali
செப் 21, 2024 07:55

உங்களைப்போல, உங்கள் அளவுக்கு அவரும் அறிவாளிதான் ....


Kasimani Baskaran
செப் 21, 2024 06:54

ஆதீம்க்காவிலிருந்து தீம்க்காவுக்கு புலம் பெயர்ந்து திமுகவுக்கே புதிய இரத்தம் பாய்ச்சியவர்களுக்கு துணை முதல்வர் பதவி பரிசாக கொடுக்கவேண்டும் என்று செல்லூரார் எதிர்பார்ப்பது போல தெரிகிறது. அப்படியே பழைய மாணவர்களை ஓரங்கட்டியது போலவும் ஆகும். பலே பலே திராவிட ஒழிப்புக்கு நல்ல உத்தி.


முக்கிய வீடியோ