உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சொன்னது ஒரு குத்தமா?: கல்வித்துறை அதிகாரிக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சொன்னது ஒரு குத்தமா?: கல்வித்துறை அதிகாரிக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரம்பலூர்: விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது தொடர்பாக பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இதற்கு ஆசிரியர்கள் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்.,7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை அரசு பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் எனக்கூறி பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது தொடர்பான உறுதிமொழிகள் இடம்பெற்றதுடன், மகிழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோம் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.விநாயகர் சதுர்த்தி விழாவை பொறுத்தவரை இதுவரை அரசு பள்ளிகளில் கொண்டாட்டம் போன்றவைகள் நடக்காதபோது இப்போது புதிதாக அறிவிப்பு வந்துள்ளதாக கூறி, ஆசிரியர்கள் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தனிச்சையாக அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பிய முதன்மை கல்வி அலுவலர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

விளக்கம்

இது தொடர்பாக பள்ளிகல்வித்துறை வெளியிட்ட விளக்கம்: விநாயகர் சதுர்த்தி தொடர்பாக, சுற்றறிக்கை எதுவும் நேரடியாக வழங்கப்படவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை அடிப்படையில கலெக்டர்கள் அறிவுறுத்தலால் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கலெக்டர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

RIfay
செப் 08, 2024 13:00

கல்வித்துறையில் ஊடுருவி உள்ள சங்கீகளின் கைவரிசை வடமாநிலங்களை போல மனிதநேயத்தை நாசமாக்க முயலும் இந்துத்துவின் செயல்


xyzabc
செப் 08, 2024 23:15

தலைவர் அமெரிக்கா வில் சைக்கிள் ஓட்டி கொண்டு இருக்கிறார். வந்ததும் பேசலாம்.


Palanisamy T
செப் 08, 2024 07:18

நிச்சயம் குற்றமில்லை கல்வித் துறை அதிகாரியை ஆசரியர்கள் எதிர்க்கலாம். ஆனால் கண்டிக்க முடியாது. கண்டித்தால் குற்றமாக கூடமுடியலாம்.வாக்களிக்கின்ற மக்கள்தான் அவரை கண்டிக்கவேண்டும் மேலும் தாங்கள் தேர்வுச் செய்த ஆட்சியாளர்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் . இல்லையென்றால் நாளை தமிழகத்தில் தமிழர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாகவும் கேள்விக் குறியாகிவிடும். அந்த கேவலமான வழியை நோக்கித்தான் தமிழர்கள் இப்போது பயனம் செய்கின்றார்கள். பிள்ளையார் வழிப்பாடு தொன்மை வழிப்பாடு. தமிழ் மொழி கலாச்சாரம் சமயம் வாழ்வு சம்பந்தப் விஷயங்களில் இவர்கள் தேவையில்லாமல் நுழைவதும் முடிவெடுக்கவும் நேற்று வந்த இவர்கள் யார்?


jayvee
செப் 07, 2024 18:07

எந்த ஆசிரியர் கூட்டணி .. திமுக அடிவுருடிகளா அல்லது கிருத்துவ அமைப்பின் கைக்கூலி கூட்டணியா


Divya
செப் 07, 2024 07:56

விடுமுறை நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதால் சங்கத்திற்கு என்னதான் பிரச்சனை.. அரசை குஷிப் படுத்துவதற்கு ஆசிரியர் சங்கங்களும் என்ன வேண்டுமானாலும் செய்யும்.


Bala
செப் 06, 2024 12:38

பகவான் ஶ்ரீ வினாயகர் சதுர்த்தி கொண்டாவது நல்ல நல்ல கருத்துக்களையும் ஒழுக்கத்தையும் இருபாலரும் பரிமாறி கொள்வதாகும். இதே போல நல்ல கருத்துக்களை பரிமாறி கொள்வதற்கு எல்லா மதக் கோட்பாடுகளும் ஒன்றினையலாம். நல்ல கருத்துக்கள் மட்டுமே பரிமாற வேண்டும். சத்திய தர்ம ஞானநிலை கடைபிடிக்க வேண்டும். ஓம் நமச்சிவாய நம


Palanisamy T
செப் 08, 2024 08:25

இந்த ஆலோசனையை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். காது கொடுத்து கேட்கவும் மாட்டர்ர்கள். அவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற போதனைகள் அப்படி. அன்று இந்திய துணைக் கண்டத்திற்கு வந்தது ஒரு மதம். அதுவும் படையெடுத்து வந்தவர்கள். அதன்பின் நேற்று வந்தது இன்னொன்று. இந்த பூமியில் தொன்மைக் காலமாக பரிதாபமாக வாழ்ந்து செத்தவர்கள் எண்ணில்லா பல கோடி மக்கள். அப்போ தெல்லாம் இவர்களை காக்கவராத இம் மதங்கள் இப்போதுமட்டும் வந்து இங்கே வந்து புலம்புவது ஏனோ? முன்பு செத்தவர்களின் கதி? நமக்கு திருக்குறள் தந்த ஒரு உண்மை. அது "இரந்து வாழ்தல் வேண்டின் பறந்து கெடுக உலகு இயற்றியான்" என்ற குரள். இங்கு உலகு இயற்றியான் என்றுச் சொன்னது அந்த இறைவனை. அந்த இறைவனையே பரந்துக் கெடுக என்றுள்ளார். அந்த இறைவனைத் தான் முதல் 10 கடவுள் வாழ்த்துப் பாடல்களில் இலக்கண சுவையோடு வள்ளுவர் போற்றிப் பாடியுள்ளார். எந்த உயிர்களையும் இறைவன் இரந்துவாழ படைக்கவில்லை என்பதே இதன் பொருள். தயவுச் செய்து திருக்குறளை கொஞ்சம் விளங்கப் படியுங்கள். அப்போதுதான் நம்மைப் பற்றிய பல உண்மைகள் அருமைகள் நமக்குத் தெரியவரும் .


HARI
செப் 06, 2024 08:47

நீங்க வைத்த பிள்ளையாரை எவன் வந்து பூஜை செய்ய போறான். உங்க வீட்டில் வந்து எவனும் நிக்க போறதில்லை. இந்த பழைய பஞ்சாங்கத்தை பாடி இன்னும் மக்களை முட்டாளாக்க வேண்டாம்.


பல்லவி
செப் 05, 2024 22:44

எரியூட்டினால் தீயா நிக்கணும் குமாரு என்ற டயலாக் ஞாபகமூட்டுவது போல் தோணுதா


Senthil
செப் 05, 2024 01:48

விநாயகர் சதுர்த்தியை தமிழ்நாட்டில் கொண்டாடுவதே புதிது. 20 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி என்றால் யாருக்கும் தெரியாது. இதுல பள்ளிக்கூடத்தில் வேறயா? பள்ளிக்கூடத்தில் ஆயுதபூஜை மட்டும் காலங்காலமாக கொண்டாடப்படுகிறது, அதையே தொடரனும்.


Rajappa
செப் 05, 2024 06:31

கொத்தடிமை


ஆரூர் ரங்
செப் 05, 2024 07:52

பிள்ளையார்பட்டி விநாயகர் ஆலயம் 1500 ஆண்டுகள் பழைமையான ஒன்று. விஷயம் தெரிந்து எழுதுங்க.


Divya
செப் 07, 2024 07:59

எனக்கு 54 வயதாகிறது எனக்கு ஆறு வயதிலிருந்து தஞ்சாவூர்ல விமர்சியாக கொண்டாடுவார்கள்.. என் தாயார் நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.


jayvee
செப் 07, 2024 18:08

அரிசிமூட்டையான பின்பும் எதுக்குடா முருகன் பெயர். . கோட்டாவிற்காக ..


பல்லவி
செப் 04, 2024 20:49

விரும்பும் கடவுளை வணங்க உரிமையை யாரும் பறிக்க முடியாதையா


T.sthivinayagam
செப் 04, 2024 20:14

எல்லாரும் புள்ளையார் சதுர்த்திக்கு உறுதி மொழி எடுக்கலாம் உண்டியலில் காசு போடலாம் குருக்களுக்கும் காசு தரலாம் புள்ளையார்வைக்க பணம் தரலாம் ஆனால் யாரும் அர்ச்சனை அபிஷெகம் மட்டும் நாங்க தான் பண்ணுவோம் என்று சொல்லுவது அனைத்து ஹிந்துக்களையும் சங்கடபடுத்தும் என்று ஹிந்துக்கள் சொல்கிறாரகள்


Senthil
செப் 05, 2024 01:57

அது அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Malarvizhi
செப் 05, 2024 09:43

திரு செந்தில் அவர்களே ஒரு மதத்தினரை மட்டுமே கேள்வி கேட்க கூடாது, அனைத்து மதத்தினரையும் கேட்கவேண்டும். மசூதிக்கு இஸ்லாமிய பெண்கள் தொழுகை செய்ய செல்ல முடியுமா? இந்த கேள்வியை ஏன் நீங்கள் கேட்பதில்லை?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை