உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, திருப்பூர் நகரங்களுக்கு விசிட் அடித்த பயங்கரவாதி; என்.ஐ.ஏ., விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கோவை, திருப்பூர் நகரங்களுக்கு விசிட் அடித்த பயங்கரவாதி; என்.ஐ.ஏ., விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கோவை: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி அப்துல் பாசித் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பலமுறை சென்று வந்தது உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை புரசைவாக்கத்தில் ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் அப்துல் பாசித் என்பவர் பணியாற்றி வந்தார். ஐ.எஸ்.ஐ.எஸ்., இயக்கத்தில் இளைஞர்களை சேர்த்ததாக அவரை சில நாட்கள் முன்பு தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., கைது செய்தது.விசாரணையில் அப்துல் பாசித் பலமுறை கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு சென்று வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்த தகவல்கள் வருமாறு; சோதனையில் சிக்கிய பொருட்கள், ஆவணங்கள் படி விசாரணை நடத்தப்பட்டது. தொடர் விசாரணையில் அப்துல் பாசித், பலமுறை கோவை மற்றும் திருப்பூர் நகரங்களுக்கு வந்து சென்றிருக்கிறார். பல்வேறு இடங்களில் தங்கி இருந்திருக்கிறார்.இங்குள்ள இஸ்லாமிய இளைஞர்களிடம் பேசி அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ்., இயக்கத்தில் சேர மூளைச்சலவை செய்தது தெரிய வந்திருக்கிறது. அவர் எத்தனை முறை வந்தார், யாரை சந்தித்தார், அந்த இளைஞர்கள் யார் என்பன பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.3 ஆண்டுகளாக அப்துல் பாசித்துடன் பணியாற்றிய இளைஞர்கள் பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. என்.ஐ.ஏ.,வுடன், மாநில புலனாய்வு அமைப்புகளும் அதுபற்றிய விவரங்களை விசாரித்து வருகின்றன. முன்னதாக, அப்துல் பாசித்துடன் தொடர்பில் இருந்த முகமது சாதிக் பாஷா, 2024ம் ஆண்டு பிப். மாதம் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மயிலாடுதுறையில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்திய என்.ஐ.ஏ., அமைப்பினர் செல்போன், பென் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருட்களை கைப்பற்றினர். சாதிக் மற்றும் அவருடன் இருந்தவர்கள் ஐ.எஸ்.ஐ., கிலாபத் கட்சி, கிலாபத் முன்னணி ஆகியவற்றை உருவாக்கி, ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்திருக்கின்றனர். அவர்கள் யார் என்பது பற்றியும் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அதிகாரிகள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

shakti
பிப் 04, 2025 21:08

இந்த மார்கத்தை அமைதியாக கடந்து செல்லவும் ...


R S BALA
பிப் 04, 2025 18:46

என்னா ஒரு முகக்கலை இவனுக்கு...


என்றும் இந்தியன்
பிப் 04, 2025 16:46

ஏன் சென்றான்??? அங்கு பங்களாதேஷ் முஸ்லிம்கள் அதிகம்??? அவர்களை தீவிரவாத ஐ எஸ் இயக்கத்தில் சேர்க்கத்தான்


Yaro Oruvan
பிப் 04, 2025 15:50

மொகறய பாருங்க.. பச்ச கொழந்த சார்.. அமைதியா குண்டு வச்சிட்டு அமைதியா சாவடிச்சிட்டு அமைதியா போயிடும் கொழந்த.. அத்தப்போயி கைது கியது எல்லாம் செஞ்சிகிட்டு.. யப்பா டே இவானா வெளில ஒடனே வுடனும்னு ஆர்ப்பாட்டம் சேய்ங்கடா .. அப்புறம் மதச்சார்பின்மை எப்டி காப்பாத்துறது.. பாஜக உள்ள வந்துரும் பாய்


ஈசன்
பிப் 04, 2025 13:33

கொலை, கொள்ளை, ஊழல், மணல் திருட்டு, பாலியல் குற்றங்களை போன்றவற்றை விட மிக மிக ஆபத்தான விஷயம் தேச துரோகம், குண்டு வெடிப்பு போன்றவை. எனவே, தமிழக காவல் துறையும் மத்திய உளவுப் பிரிவு போலீஸும் இணைந்து செயல்பட்டு இவர்களை இருப்பு கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். மேலே சொன்ன குற்றங்கள் காய்ச்சல், வாந்தி, பேதி போன்றவை. விரைவில் சரி செய்து விடலாம் ஆனால் தேச துரோகம் கான்சர் போன்றது.


கத்தரிக்காய் வியாபாரி
பிப் 04, 2025 12:49

தீயமுக ஆட்சின்னா சுதந்திரம் தான்.


sridhar
பிப் 04, 2025 12:03

கோவையில் திமுக அமிகா வெற்றி - காரணம் புரியுதா கோவை ஹிந்துக்களே .


Barakat Ali
பிப் 04, 2025 11:49

சட்டம் ஒழுங்கு வேலையையும் என் ஐ ஏ வே பார்க்கட்டும் ..... அப்பத்தான் கூட்டணி ன்னு இரும்புக்கை மாயாவி கறாரா சொல்ட்டாரோ ????