பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா: நயினார் கேள்வி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:கடந்த 5 நாட்களில் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் என்ற செய்தியைப் படித்ததும் மனதில் எழுந்த முதல் கேள்வியே கடந்த 5 நாட்களில் வெளியே தெரிய வந்த வன்கொடுமைகள் 17 எனில், வெளியே சொல்ல பயந்து மறைக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வளவு? 17 குற்றங்களில் 12 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் என்பதை உற்று நோக்கும் போது, கடந்த நான்காண்டுகளில் எத்தனை குழந்தைகளின் வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது?'தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்' என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நம் வீட்டுப்பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா? ஆட்சி முடியும் தருவாயிலாவது விளம்பரத்தை விடுத்து வெளியுலகம் வாருங்கள். நிர்வாகத்திறனின்மையால் அவதியுறும் பொதுமக்களின் அழுகைக் குரலைக் கேட்டுப் பாருங்கள்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.