உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காந்திகிராம பல்கலையில் மார்ச் 9ல் பட்டமளிப்பு விழா இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்பு

காந்திகிராம பல்கலையில் மார்ச் 9ல் பட்டமளிப்பு விழா இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்பு

சின்னாளபட்டி:காந்திகிராம பல்கலையில் மார்ச் 9ல் நடக்கும் 37வது பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்க உள்ளார்.இங்கு 2022 நவ. 11ல் நடந்த 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றனர். இதில் 2018--19, 2019--20 கல்வியாண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. எஞ்சிய மாணவர்களுக்கு தனியே பட்டமளிப்பு நடக்கும் என நிர்வாகம் தெரிவித்திருந்தது. சமீபத்தில் இதற்கான அறிவிப்பை பல்கலை வெளியிட்டது.அதன்படி '2020--21, 2021--22, 2022--23 கல்வி ஆண்டுகளுக்கான 37-வது பட்டமளிப்பு விழா மார்ச்9ல் நடத்தப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட கல்வி ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பல்கலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. பல்கலை வேந்தர் அண்ணாமலை தலைமையில் 4201 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது. இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி