வாசகர்கள் கருத்துகள் ( 2 )
What is new in this? If this does not work, then only there is a surprise. What happened to PSLV C61 failure analysis? Why did the third stage fail? How long will it take to identify the problem?
வாழ்த்துக்கள்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பயன்படும் விகாஸ் இன்ஜினின் சோதனை 17 வினாடிகளுக்கு வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 'இஸ்ரோ' வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. வீரர்களை அனுப்புவதற்கு முன்னேற்பாடாக, பல்வேறு கட்டங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.மகேந்திரகிரி இஸ்ரோ மையம், விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட்டுகளின் இன்ஜின்கள், குறிப்பாக விகாஸ் இன்ஜின்கள் மற்றும் கிரையோஜெனிக் இன்ஜின்கள் தொடர்பான பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 18) ககன்யான் திட்டத்தில் பயன்படும் விகாஸ் இன்ஜினின் சோதனை 17 வினாடிகளுக்கு வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.இந்த சோதனை முழுமையாக வெற்றி பெற்றதை, இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.இந்த வெற்றி, எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கும், குறிப்பாக இந்தியாவின் மனித விண்வெளிப் பயண திட்டமான ககன்யானுக்கும் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. விகாஸ் இன்ஜின், இஸ்ரோவின் PSLV மற்றும் GSLV ராக்கெட்டுகளின் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய திரவ உந்து சக்தி இன்ஜின் ஆகும்.
What is new in this? If this does not work, then only there is a surprise. What happened to PSLV C61 failure analysis? Why did the third stage fail? How long will it take to identify the problem?
வாழ்த்துக்கள்