உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் மெயின் தேர்வு எழுதிய உணர்வை தந்தது: தினமலர் நீட் மாதிரி தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்

நீட் மெயின் தேர்வு எழுதிய உணர்வை தந்தது: தினமலர் நீட் மாதிரி தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்

மதுரை : மதுரையில் தினமலர் - ஸ்டாரெட்ஸ் இணைந்து நடத்திய தினமலர் நீட் மாதிரித் தேர்வு, 'நீட்' மெயின் தேர்வினை எழுதிய உணர்வைத் தந்தது என மாணவர்கள் உற்சாகம் தெரிவித்தனர்.பிளஸ் 2 முடித்து மருத்துவக் கனவில் உள்ள மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தினமலர் சார்பில் இந்த மாதிரித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு மே 4 ல் நடக்கும் நீட் தேர்வில் பங்கேற்க தயாராகி வரும் மாணவர்களுக்கு மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நேற்று தினமலர் சார்பில் நீட் மாதிரி தேர்வு நடந்தது. இதில் 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.முன்பதிவு செய்தவர்கள் காலை 9:30 மணிக்கு வரவேண்டும் எனவும், 9:45 மணிக்கு தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நிலையில், ஆர்வ மிகுதியால் காலை 8:00 மணிக்கே பெற்றோருடன் மாணவர்கள் வந்தனர். அவர்கள் சரியான நேரத்தில் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1:15 மணி வரை தமிழ், ஆங்கிலத்தில் தேர்வு எழுதினர். அரசு நடத்தும் நீட் தேர்வு போன்றே நடத்தப்பட்டது. தேர்வு முடியும் வரை பெற்றோர் அமர்வதற்கு கல்லுாரி வளாகத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

MUTHU
ஏப் 28, 2025 13:03

ஒரு காமெடி நினைவுக்கு வருகின்றது. இந்தியாவில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவ மதம் பரப்பும் தீவிர ஏற்பாடுகள் ஆரம்பித்த பொழுது செவிடர்கள் கேட்கின்றார்கள் முடவர் நடக்கிறார்கள் குருடர்கள் பார்க்கின்றார்கள் என்று பிரசங்கம் செய்தனர். அப்பொழுது ஒரு நிகழ்ச்சியில் பிறவி கண்பார்வையற்ற ஒருவர் தனக்கு பார்வை வந்து விட்டது என்று கூவியபொழுது ஒரு வீம்பு மனிதர் ஒரு நிறத்தை காட்டி இது என்ன நிறம் என்பார். அவரும் சரியாக சொல்வர். பிறவி குருடருக்கு நிறம் என்றால் என்னவென்று தெரியும் என்று கேலி செய்தார்கள். மெயின் தேர்வு முதலில் எழுத இருப்போருக்கு நீட் மெயின் தேர்வு எழுதிய உணர்வு எப்படி வரும்.


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 28, 2025 11:03

வினாத்தாள் முன்னதாகவே கிடைத்து விட்ட சந்தோஷம்தான் இப்படி குதூகலிக்கிறார்களோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை