உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அங்கீகாரம் கொடுத்தது மிகப்பெரிய பாக்கியம்: நடிகர் அஜித் நெகிழ்ச்சி

அங்கீகாரம் கொடுத்தது மிகப்பெரிய பாக்கியம்: நடிகர் அஜித் நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அரசு எனக்கு விருது அறிவித்துள்ளதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக நன்றி தெரிவித்து அஜித் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cpu9du6v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படியொரு அங்கீகாரத்தை இந்திய அரசு எனக்கு கொடுத்தது மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இந்த அங்கீகாரம் எனக்கானது மட்டும் என நான் நினைக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக என்னை உருவாக்கிய திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் குழுக்களூக்கும் இதில் பெரும் பங்கு உண்டு. என்னுடைய ரசிகர்கள் இல்லையென்றால் எதுவுமே சாத்தியமாகி இருக்காது. அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அஜித்குமார் அந்த கடிதத்தில் நன்றி கூறியுள்ளார்.பத்ம பூஷன் விருது வென்ற அஜித் குமாருக்கு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

N.Purushothaman
ஜன 26, 2025 08:39

வாழ்த்துக்கள் .....


ஆரூர் ரங்
ஜன 26, 2025 07:42

சிலர் விஜய் பிஜெபி எதிர்ப்பு அரசியலில் இறங்கியதால் அஜித் க்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்கிறார்கள். இல்லாவிடினும் அஜித் விருதுக்குத் தகுதியானவர்தான்.


J.V. Iyer
ஜன 26, 2025 05:02

ஒரு நடிகன் நல்லவனாகவும், நேர்மையுடனும், ரசிகர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், குடும்பப்பாங்காகவும், கிசுகிசுக்களில் மாட்டிக்காமலும், கார் ரேஸில் வல்லவராகவும், இருக்கமுடியும் என்பதற்கு ரசிகர்மன்றம் இல்லாத நடிகர் நல்ல மனிதர், மனிதருள் மாணிக்கம் அஜித்குமார் ஓர் அரிய உதாரணம். இதற்கு அங்கீகாரம் கொடுத்த பாஜக அரசுக்கு நன்றி, நன்றி. இவரைப்பார்த்தாலாவது மற்றவர்கள் திருந்தலாம். பாராட்டுக்கள் அஜித் You fully deserve this award.


சிவம்
ஜன 25, 2025 23:13

அடப்பாவிகளா! விஜய்க்கு எதிராக இவர நிறுத்தி இவரது ரசிகர் ஒட்ட அள்ளலாம்னு பார்த்தா, இப்படி பண்றீஙகளே நீங்க நல்லா இருப்பீங்களா


prem Anand
ஜன 25, 2025 22:42

congratulations ak your a real hero


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை