உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயரதிகாரிகளை பழிவாங்க சகஅதிகாரிகளே குற்றங்கள் புனைவது கேவலமாக உள்ளது: ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீமதி காட்டம்

உயரதிகாரிகளை பழிவாங்க சகஅதிகாரிகளே குற்றங்கள் புனைவது கேவலமாக உள்ளது: ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீமதி காட்டம்

திருநெல்வேலி: ''அரசு அதிகாரிகளை பதவி உயர்வு பெற விடாமல் தடுக்கும் நோக்கில் குற்றங்கள் புனைவது ஏற்புடையதல்ல. கேவலமாக உள்ளது'' என ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்தார். திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துணை இயக்குனர் சரவணபாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க அவரது அலுவலகத்தில் ரூ 2.50 லட்சம் பணத்தை முன்னரே மறைத்து வைத்து, பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் சிக்க வைக்க முயற்சித்த வழக்கு சி.சி.டி.வி., காட்சிகள் மூலம் அம்பலமானது. இது குறித்து துணை இயக்குனர் சரவணபாபு புகாரின் பேரில் பணம் வைத்த விஜய், உதவிய முத்து சுடலை திட்டமிட்ட தீயணைப்பு படை வீரர்கள் ஆனந்த், முருகேஷ், மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய நபராக தேடப்படும் திருப்பூர் தீயணைப்பு அலுவலர் வீரராஜ் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். முன் ஜாமின் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று வழக்கு விசாரணை நடந்தது. பாதிக்கப்பட்ட துணை இயக்குனர் சரவணபாபு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், உயர் அதிகாரியை சிக்க வைக்கும் குற்றநாடகத்தில் முக்கிய குற்றவாளியாக தீயணைப்பு அலுவலர் வீரராஜ் உள்ளார். அவர்தான் மற்ற தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோரை இணைத்து நெட்வொர்க்கை ஏற்படுத்தி உள்ளார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தால் தான் முழுப்பின்னணியும் தெரியவரும். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு என்பது தெரியும் என்றார். தீயணைப்பு அலுவலர் வீரராஜ் தரப்பில் வழக்கறிஞர் பழனிவேல் ராஜன் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மனோஜ் குமார் ஆஜரானார். இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீமதி, ''அரசு அதிகாரிகளை பதவி உயர்வு பெற விடாமல் தடுக்கும் நோக்கில் சக அதிகாரிகள் குற்றங்கள் புனைவது ஏற்புடையதல்ல. கேவலமாக உள்ளது. இவர்தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நபராக கருதப்படுவதால் அவரை போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டும். இதன் முழு பின்னணியும் தெரிய வேண்டும். எனவே முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். ஜன. 2 ல் அவருக்கு ஜாமின் கேட்டு மனு செய்யுங்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Modisha
டிச 16, 2025 14:04

இதெல்லாம் ஜூஜூபி . பிடிக்காத நீதிபதியை ஜாதி பேர் சொல்லி திட்டறாங்க .


Rathna
டிச 16, 2025 11:50

ஒருவர் நேர்மையாக இருந்தால் அரசு பதவியில் இருக்க முடியாது. பனிஷ்மென்ட் ட்ரான்ஸபெர், இடைநீக்கம் ஆகியவை நடக்கும். முழு சம்பளம் வராது இது தவிர சாதி சார்ந்து நடக்கும் பிரச்சனைகள், ஊழல் தொகையை பிரித்து கொள்வதில் உள்ள சண்டை, பிரச்சனை எல்லாம் வேறு இருக்கிறது. நீதி துறையில் கூட தனது சாதி மற்றும் மதத்தை சேர்ந்தவர் நீதிபதியாக இருக்கும் நேரத்தில் வழக்கை அவரிடம் கொண்டு செல்வது நடக்கிறது.


Rengaraj
டிச 16, 2025 11:31

ஊழல் பண்ணினா டிஸ்மிஸ் தான், அனைத்து சொத்துகளும் பறிமுதல்தான் என்று சட்டம் போடாதவரை அதிகாரிகள் குற்றம் புரிந்துகொண்டு இருப்பார்கள். மக்களுக்கான வேலையே பார்க்கமாட்டார்கள். அடுத்த ஆறு ஏழு மாசத்துக்கு இங்க தேர்தலே வேண்டாம். திமுக வந்ததில் இருந்து துறை ரீதியாக நிலுவையில் இருக்கும் அனைத்து அரசு அதிகாரிகளின் மீதான ஊழல் குற்ற புகார்கள், அதன் மீதான அரசின் விசாரணை நடவடிக்கைகள், தண்டனைகள் தருவது எல்லாம் முடியட்டும். அதே போன்று காவல் நிலையத்தில் பதிவான குற்றங்கள் அனைத்துக்கும் கைது நடவடிக்கை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் பண்ணி விசாரணை எல்லாம் தினமும் எல்லா நீதிமன்றத்திலும் நடக்கட்டும். அதன்பிறகு தேர்தல் நடத்தலாம். அவ்வளவு பண்ணிவச்சிருக்காங்க. ஒவ்வொருத்தரும் அடுத்தவரை கையகாட்டுறாங்க இப்படியே விட்டா, அடுத்த அமையப்போகும் அரசிலும் இந்த ஊழல் அரசு அதிகாரிகளின் ஊழல் தொடரும்.


Madras Madra
டிச 16, 2025 10:45

சட்டம் குற்றங்களை விசாரித்து தண்டனை தான் வழங்கும் யுவர் ஆனர் மக்கள் நல்லவனாக வாழ அறம் மீண்டும் தழைக்க வேண்டும் அது திராவிடர்கள் இருக்கும் வரை நடக்காது


Barakat Ali
டிச 16, 2025 10:20

நீதிபதி ஸ்ரீமதி அவர்களுக்கு சல்யூட் .....


duruvasar
டிச 16, 2025 10:01

ஆட்சியாளர்களின் நிர்வாக சீர்கேட்டுகளுக்கு மற்றொரு உதாரணம்.


VENKATASUBRAMANIAN
டிச 16, 2025 08:31

திராவிட மாடல் அரசில் எதுவும் நடக்கும். திமுக ஆட்சி முடிந்து பின்னர் தேர்தல் நடத்த வேண்டும். கவர்னர் ஆட்சியில் நடந்தால் மட்டுமே நேர்மையாக நடக்கும். இப்போது அதிகாரிகள் எல்லோருமே திமுகவின் கைப்பாவைகள்.


sundar
டிச 16, 2025 08:14

திரு.சரவண பாபு அவர்கள் மிகவும் நேர்மையானவர். இலஞ்சம் வாங்காத அதிகாரி. தனது துறை டி.ஜி.பி.அவர்கள் ஆணையிட்டாலும் அநியாய வழியில் செல்ல மாட்டார். அவர் மிக நேர்மையானவர் என்று துறை ரீதியாக தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர். இலஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் உதவி இல்லாமல் இதை செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. இவரது சாதிக்கு எதிர் மனநிலை கொண்டவர்கள் பொறாமையால் செய்யவும் வாய்ப்பு உள்ளது. அரசுத் துறையில் நேர்மையாக இருந்தால் இது தான் பரிசு. இவரும் இலஞ்சம் வாங்கி சுக போக வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். இவருக்கு மான நஷ்டமாக அரசு ஒரு கோடி ₹ வழங்க வேண்டும். நேர்மையான அதிகாரிகளுக்கு விடப்படும் சவாலாக உள்ளது. சத்தியம் தவறிய உத்தமர்களின் சதி வலையில் சிக்கிய திரு.சரவணபாபு அவர்கள் மீண்டும் மன உறுதியுடன் பணியில் சேர்ந்து வைரமாக மின்ன வேண்டும். உங்கள் நேர்மைக்கும் போராட்டத்திற்கும் ஒரு ராயல் சல்யூட். இலஞ்சம் வாங்க இடையூராக இருப்பதால் இவர் பல இடங்களில் தூக்கி அடிக்கப்பட்டார். அரசியல் தலையீடு இதில் சுத்தமாக இல்லை. சக அதிகாரிகளின் இலஞ்ச மற்றும் சாதி வெறிக்கு இவர் பலியாகி உள்ளார்.


xyzabc
டிச 16, 2025 05:38

திராவிட மாலின் அம்சம். ரொம்ப பேச கூடாது


Gajageswari
டிச 16, 2025 05:30

முதலில் அவரை முதலில் பணிநீக்கம் செய்யவும்.


முக்கிய வீடியோ