உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்காவை வழிநடத்திக் கொண்டு இருப்பது இந்தியர்கள் தான்; அண்ணாமலை

அமெரிக்காவை வழிநடத்திக் கொண்டு இருப்பது இந்தியர்கள் தான்; அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அமெரிக்காவை வழிநடத்திக் கொண்டு இருப்பது இந்தியர்கள் தான்' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: பத்து நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏ.ஐ., மாநாட்டில் பேசினார். எத்தனை பேர் கேட்டீர்கள் என்று தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியில், கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கலந்து கொண்டனர். மூன்று விஷயங்களை டிரம்ப் முன் வைத்தார்.

தேசப்பக்தர்

சீனாவில் பொருட்களைத் தயாரிக்கக் கூடாது, வேலைவாய்ப்பில், முக்கியப் பொறுப்புகளில் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கூடாது, அமெரிக்காவில்தான் முதலீடு செய்ய வேண்டும்.இந்த மூன்று விஷயங்களை செய்தால் தான், உங்களை தேசப்பக்தர் அமெரிக்கர் ஆக நான் பார்ப்பேன். என்னை பொறுத்தவரை இந்த மூன்று விஷயங்களை இந்தியாவிற்கு ஒரு வரமாக நான் பார்க்கிறேன். அமெரிக்காவை வழிநடத்திக் கொண்டு இருப்பது இந்தியர்கள் தான்.

மூளையும், திறமையும்...!

இதில் நகைச்சுவை என்னவென்றால் அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னணி நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளில் 70% இந்தியர்கள்தான். அவர்கள் முன்பே, இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு, முக்கிய பொறுப்புகள் வழங்கக் கூடாது என்று பேசியிருக்கிறார் டிரம்ப். அதுதான் நம் இந்திய நாட்டின் பலம். இந்தியர்களின் மூளையும், திறமையும் அவ்வளவு மதிப்புமிக்கது. இன்றைக்கு மாணவர்கள், இளைஞர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் முதலில் அவர்களுக்கு நிலம் இருக்க வேண்டும். ஒரு ஏக்கர் வைத்துக்கூட விவசாயம் செய்யமுடியும். அதற்கு நல்ல பயிற்சி வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Nagoor Meeran K A
செப் 02, 2025 09:51

அமெரிக்காவை வழி நடத்திக் கொண்டு இருப்பது இந்தியர்கள்தான் என்பது உண்மையெனில் அவர்கள் இந்தியாவுக்கு விரோதமாக செயல்படுகிறார்கள் என்பதே உண்மை, ஏனென்றால் அமெரிக்காவின் இன்றைய நடவடிக்கைகள் அப்படித்தான் உள்ளன. மேலும் அவர்கள் அனைவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்.


venugopal s
ஆக 03, 2025 13:05

தமிழகம் சமூக, தொழில், பொருளாதார ரீதியாக முன்னேறியதற்கு மத்திய பாஜக அரசு தான் காரணம் என்று சொல்வது போல் அபத்தமாக உள்ளது.


vivek
ஆக 03, 2025 15:46

நிச்சயமாக திருட்டு திமுக காரணமில்லை என்று உனக்கே தெரியும் வேணுகோபால்


அப்பாவி
ஆக 03, 2025 07:41

அவிங்கள்ளாம் அமெரிக்க பிரஜைகளாக மாறி மாமாங்கம் ஆயிடிச்சு. இந்த ஊர் தில்லுமுல்லுகளையும் அங்கே அரங்கேற்றி வழி நடத்துகிறார்கள்.


முருகன்
ஆக 03, 2025 07:10

டிரம்ப் காதில் விழ போகிறது


vivek
ஆக 03, 2025 08:03

அவனுக்கு மொட்டை....


Nadanasigamany Ratnasamy
ஆக 03, 2025 04:32

அரசியல், ஆன்மீகம், விஞ்ஞானம், சுற்றுச்சூழல் முதலான பல்வேறு தலைப்புகளில் திரு. அண்ணாமலையுடன் நேருக்கு நேர் விவாதிக்கும் திறமையும், தகைமையும் தமிழகத்தில் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது.


Thravisham
ஆக 03, 2025 11:44

தமிழக அரசியல்/நிர்வாகம் சீராக வேண்டும் என்றால் இவர் முதல்வரகனும். தமிழக அரசியல்வாதிகளில் நேருக்கு நேர் விவாதிப்பதில் அன்புமணி ஓரளவுக்கு ஒகே. ஆனால் அகில இந்தியாவிலும் அண்ணாமலை தான் டாப்.


Tamilan
ஆக 03, 2025 00:14

பாஜகாரர்களா ? திமுகக்காரர்களா? இவருக்கு இந்திய நாட்டு சார்பாக பேச அதிகாரம் கொடுத்தது யார்?


vivek
ஆக 03, 2025 06:22

திராவிட கொத்தடிமை தொண்டன்... உனக்கு பேச என்ன அருகதை


vivek
ஆக 03, 2025 06:35

இந்த மொக்கை கருத்தை போட உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது.. அவர் பேசுவது மூளையை பற்றி...


Tamilan
ஆக 03, 2025 08:57

இந்து மதவாத வெறியர்கள்


Matt P
ஆக 02, 2025 23:47

இந்தியாவை வழி நடத்தி கொண்டிருப்பது அமெரிக்காக இருக்குமோ. இப்படி மாறி மாறி வழி நடத்திக்குவாங்க போலிருக்கு.


சிட்டுக்குருவி
ஆக 02, 2025 23:40

ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள ஒன்று இந்திய மாநிலங்கள் /இந்தியா நடைமுறைப்படுத்தவேண்டியது .தரிசாக இருக்கும் அரசு நிலங்களை சீர்படுத்தி,வளம்படுத்தி ,நீள்வளம் ஏற்படுத்தி சிறு பகுதிகளாக பிரித்து பயிர்செய்யவிரும்புவோருக்கு வருடாந்திர குத்தகைக்கு விடுகிறார்கள் .வேண்டிய ஆர்கானிக் உரங்களையும் அங்கேயே கிடைக்க வழிசெயகிண்ரறார்கள் .இதை விவசாயத்துறைமூலம் நிர்வகிக்கலாம் விருப்பமுள்ள இளைஞ்சர்களுக்கு/வீட்டில் அடைந்துகிடக்கும் படித்த பெண்களுக்கு ஒரு நல்ல வாய்ய்ப்பாக அமையும். நாட்டின் உற்பத்தி பெருகும்.


Natarajan Ramanathan
ஆக 02, 2025 23:13

இந்தாளு ஏதாவது பேசினாலும் அதில் உண்மை இருக்கிறது. இவர் தமிழக முதல்வரானால் மிகவும் நல்லது.


நிக்கோல்தாம்சன்
ஆக 03, 2025 03:06

இதனையும் சொன்னா உங்களை சாங்கி என்று முத்திரை குத்துங்க மதவெriறி பிடித்தவர்களும் பாலிடாயில் பாபுவின் பிறப்புகளும்


முக்கிய வீடியோ