உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைவது நல்லதல்ல

ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைவது நல்லதல்ல

சிங்கம்புணரி : ''மதமாற்றத்தால், ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவது நல்லதல்ல, என, பா.ஜ., சிறுபான்மைப் பிரிவு தேசிய செயலர், வேலூர் இப்ராஹிம் கூறினார்.

அவர் நேற்று அளித்த பேட்டி:

துணை முதல்வர் உதயநிதி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் மாற்று மதத்தினருக்கு ஆதரவாக பேசுவது போல் பேசி, சொந்த மதத்தவரை இழிவுபடுத்துகின்றனர். கேட்டால் மத நல்லிணக்கம் என்கின்றனர். எல்லோரையும் அரவணைத்துப் போவதுதான், மத நல்லிணக்கம். ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் மதங்களை சேர்ந்தோர், தொடர்ச்சியாக மத மாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. மதமாற்றத்தால், ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவது நல்லதல்ல. ஹிந்துக்களுக்கென இருக்கும் ஒரே தேசம் பாரதம் தான். அதை இழந்து விடுவோமோ என்ற அச்சம் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கும், ஹிந்து மதத் தலைவர்களுக்கும் உள்ளது. அதனாலேயே, ஹிந்துக்கள் அனைவரையும் ஒன்றுப்படுத்தி ஹிந்து எழுச்சிக்காக, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன. மற்ற மத விழாக்களுக்கு, ஹிந்துக்கள் ஒருநாளும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் ஹிந்துக்கள் மட்டும் விழாக்கள் நடத்தக்கூடாது என கூறுகின்றனர். அதை ஏற்க முடியாது. நாட்டில் அனைவரது குரலாக ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் செயல்படுகிறது. அந்த அமைப்பின் கொள்கைகளை முதல்வர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

MOHAMED Anwar
ஆக 31, 2025 20:22

ஜால்ட்ரா ஜங், ஜக், ஜங், ஜக்


Barakat Ali
ஆக 31, 2025 13:16

ஹிந்துக்கள் தங்களது எண்ணிக்கை குறைவதாக அச்சப்படுவது அல்லது தங்களை பாதுகாத்துக்கொள்ள விரும்புவது தவறானதல்ல ..... அவர்களது உரிமை .....


Abdul Rahim
ஆக 31, 2025 16:05

நீங்களும் வேலூர் காரனும் முதல்ல இங்கே கீழே வேணுகோபால் என்பவரது கருத்துக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம் ....


பேசும் தமிழன்
ஆக 31, 2025 22:47

வேணு அறிவாலய அடிமை.... வாங்கும் 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி க்கு இப்படி முட்டு கொடுக்க வந்து விடுகிறார்.


தஞ்சை மன்னர்
ஆக 31, 2025 13:08

காமெடி பீசு வேறு என்ன செய்ய வாங்கிய காசுக்கும் புது ஒப்பந்தம் போடவும் ஏதாவது சொல்லத்தான் வேண்டும் ஒருவேளை அப்துல் கலாம் போல ஜனாதிபதி ஆகா ஆசையோ எதற்கும் நாமும் சொல்லி வைப்போம் வருங்கால ஜனாதிபதி வாழ்க


Venugopal S
ஆக 31, 2025 13:03

இவர் இப்படி பூசி மெழுகி பேசுவதற்கு பதில் நேரடியாக இஸ்லாமிய மக்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருந்தால் பாராட்டலாம்!


M Ramachandran
ஆக 31, 2025 11:46

ஐயா சரணம். ஐயப்பா சரணம். என் ஐயா சரணம். ஐயப்பா சரணம். பொன் பதினென் படி மேல் மென் நகையுடன் விளங்கும் ஐயா சரணம். ஐயப்பா சரணம். என் மனக்குறையும் தீர்த்து ரச்சிப்பதும் உன் பாராம். கல் மன வஞ்சகரை களை வதே நின் தீரம். அன்பில்லா எவருக்கும் நீ ஆவாய் வெகு தூரம் அடியேன் துதித்து கோரும் என் அவா வினை தீரும் வாரும் . ஐயா சரணம். ஐயப்பா சரணம். இந்த கர்நாடக சங்கீத பாடல் முழுவதும் தெரிந்தவர்கள். பதிபிக்கவும்


Rathna
ஆக 31, 2025 11:09

சாதியே இல்லை என்று சொல்லி gulf பணத்துடன் மதம் மாற்றுகிறான். ஆனால் அங்கே நிறைய சாதிகள் உள்ளது. பெண்களுக்கு எதிரான கொடுமை தீண்டத்தகாது என்று சொல்வதை விட மிக கொடுமை. அவர்கள் ஆட்சி செய்யும் நாடுகள் அணைத்தும் மிக கொடுமையான கொடுங்கோலர்கள் ஆட்சி செய்யும், கொடூர தண்டனைகள் நடக்கும் நாடுகளாக உள்ளது.


Abdul Rahim
ஆக 31, 2025 12:29

எங்கள் இறைவனை பேசினால் ........


Abdul Rahim
ஆக 31, 2025 12:59

இறை சாபம் அனைவருக்கும் பொருந்தும் ....


Sathyan
ஆக 31, 2025 14:21

அப்படியென்றால் நீயும் மற்ற மத தெய்வங்களை பற்றி பேசாமல் இரு, உனக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?


மூர்க்கன்
செப் 01, 2025 09:37

கண்ணால் காண்பதும் பொய்?? காதால் கேட்பதும் பொய்?? தீர விசாரிப்பதே மெய் ?? எத்தனை இஸ்லாமிய தேசங்கள் சென்று உள்ளாய்?? எத்தனை இஸ்லாமிய பெண்களிடம் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?? இல்லை அடிமைகளாக இருக்கிறார்களா என்று கேட்டுளாய்?? எதுவும் தெரியாமல் கண்ட படி உளறக்கூடாது??


முதல் தமிழன்
ஆக 31, 2025 10:17

இவர் முதல்ல தான் பிறந்த மதத்தை விட்டு இந்து மதம் சேரட்டும் பிறகு ஊர் ஞாயம் பேசலாம்.


நிக்கோல்தாம்சன்
ஆக 31, 2025 09:58

சகோதரரே, நீங்க அய்யா அப்துல்கலாம் அவர்களின் வழிகாட்டுதலோடு சொல்லுகிறீர்கள் என்று நம்புகிறேன், நாம் வாழும் நாட்டை கெடுக்க அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் முயலும்போது அவர்கள் கையிலெடுப்பது ஊடக விஷமம் தான் நான் கிருஸ்த்வம், இந்து, இஸ்லாம் என்று இனைந்து நிர்க்கையில் அந்த அடிமைப்படுத்தும் கூட்டம் தலைகெட்டு நிற்கும்


Abdul Rahim
ஆக 31, 2025 09:58

எலும்புத்துண்டு


ராம்.
ஆக 31, 2025 10:40

இந்த தேசம் இஸ்லாமிய நாடாக மாறினால் உன் குடும்பத்தால் கூட நிம்மதியாக வாழமுடியாது இந்துக்கள் மத்தியில் தான் நீரெல்லாம் இந்த தேசத்தில் நிம்மதியா வாழமுடியும்.


Abdul Rahim
ஆக 31, 2025 09:56

முஸ்லீம்கள் என்றாலே நீ சில வசனங்களை வைத்திருப்பாயே இப்போ பேசு


பெரிய ராசு
ஆக 31, 2025 12:30

உனக்கு ஏன் எரியுது ...


முக்கிய வீடியோ