உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரந்தூரை தேர்வு செய்தது மாநில அரசு தான்: மத்திய அமைச்சர் தகவல்

பரந்தூரை தேர்வு செய்தது மாநில அரசு தான்: மத்திய அமைச்சர் தகவல்

சென்னை: 'விமான நிலையம் அமைக்க பரந்தூரை தேர்வு செய்தது மாநில அரசு தான்' என சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறியதாவது: சென்னை விமான நிலையத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறப்பான சேவையை வழங்கி வரும் சென்னை விமான நிலையம் தனியார் மையம் ஆக்கப்படாது. எனவே இதை அரசே வழி நடத்த முடிவு செய்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f678fzw5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அடுத்த வாரம் டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். விமான நிலையத்திற்கு பரந்தூரை தேர்வு செய்ததும் மாநில அரசுதான். பரந்தூர் விமான நிலையம் இடத் தேர்வில் மத்திய அரசுக்கு தொடர்பு இல்லை. மாநில அரசு தேர்ந்தெடுக்கும் இடத்தில் நாங்கள் பணியை தொடங்குவோம். பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது. இட தேர்வு முடிந்துவிட்டது. பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக பிற விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கோவை விமான நிலையம் அதிக பயணிகளை கையாளுவதால் அதையும் விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு ராம்மோகன் நாயுடு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

C.SRIRAM
பிப் 27, 2025 21:25

வழக்கம் போல வெத்து கருத்து . அமைச்சர் சொல்வது இடத்தேர்வு மாநில அரசுடையது . தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் விமான நிலையம் அமைப்பது மத்திய அரசுடையது என்பது .


venugopal s
பிப் 27, 2025 20:22

இப்போது அப்படித்தான் சொல்வோம்,பரந்தூர் விமான நிலையம் கட்டி முடித்து செயல்பாட்டுக்கு வந்த பிறகு நாங்கள் தான் எல்லாம் செய்தோம் என்று மார் தட்டிக் கொள்வோம் என்கிறாரா?


Oru Indiyan
பிப் 27, 2025 15:01

ஐயா சாமி விமான நிலையம் சீக்கிரம் கட்டுங்க.நான் ஒரு 5 சென்ட் நிலம் பரந்துர்லே வாங்கி போட்டு ஒரு 10 லட்சம் சம்பாதிக்கனும்


naranam
பிப் 27, 2025 14:44

இதனை ஒரேயடியாக நிறுத்தி விடலாம். இந்த விமான நிலையம் தேவையில்லை என்று மக்கள் கூறிவிட்டனர் என்று தான் கொள்ளவேண்டும். இதை பணம் சுருட்டும் பேராசைகாரர்களுக்கு மண்ணு தான்


Rajan A
பிப் 27, 2025 14:36

இதுதான் தெரியுமே. எதிர்ப்பு வந்தவுடன் மத்திய அரசின் மீது பழி போடுவார்கள். கட்டி முடித்தவுடன் பெயர் வைத்து கொண்டாடுவர். ஸ்டிக்கர் கூட ரெடியாக உள்ளது


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 27, 2025 14:30

பரந்தூர் ஏன் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டடது என்று தெரிய வேண்டும் ஆனால் ஜி ஸ்கொயர் சிட்டியிடம் கேட்க வேண்டும். உங்கள் ஊரில் இது போன்ற பெரிய நிலம் கையகப்படுத்தும் திட்டங்கள் நிறைவேற கூடாது என நீங்கள் கருதினால் நீங்கள் ஜி ஸ்கொயர் சிட்டியுடன் நட்புடன் இருக்க வேண்டும். அல்லது இது போன்ற திட்டம் வந்தால் உங்கள் நிலம் மதிப்பு உயரும் வாழ்க்கை தரம் உயரும் என்று நினைத்தால் நீங்கள் ஜி ஸ்கொயர் சிட்டி அனுக வேண்டும். வருக வருக வருக ஜி ஸ்கொயர் சிட்டி உங்களை அன்புடன் அழைக்கிறது. அனைவருக்கும் சொந்த சிட்டி ஜி ஸ்கொயர் சிட்டி. இங்கே கட்சி பேதம் ஆரியர் திராவிடர் இன் பேதம் இல்லை. வருக வருக வாழ்க வளமுடன்


raju
பிப் 27, 2025 14:08

உண்மையாக இருக்கலாம். பக்கத்தில் அவர்கள் சொத்து சொத்து வாங்கி விட்டார்கள். இப்போது விமான நிலையம் வரவில்லை என்றால் ஐயகோ .. எவ்வளவு நஷ்டம்


Samy Chinnathambi
பிப் 27, 2025 12:38

பாசிசமும் பாயாசமும் கூட்டு களவாணிகள்... பொது மக்கள் கிட்ட இருந்து யாருக்கு நெருக்கடி போகுதோ அப்போ அடுத்தவனை காட்டி கொடுத்துடுவாங்க...அதுவரைக்கும் கமுக்கமா இருப்பானுங்க... ராமர் பாலம்னு சொல்லி ரெண்டு பேரும் 720 கோடியை ஆட்டைய போட்டது முதல் ரம்மி காரன்கிட்ட தலா 1400 கோடி 540 கோடி வாங்கிகிட்டு மசோதாவை கிடப்பில் போட்டது வரை, வேதாந்தா நிறுவனத்துக்கிட்ட பணம் வாங்கிட்டு திரும்ப தொறக்கறவரை ரெண்டும் கூட்டு களவாணிகள்..


Sivagiri
பிப் 27, 2025 12:23

என்னப்பா நீங்க - - எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா - - பிட் - பிட்-ஆ தான் சொல்லுவீங்களா? அதாவது ஒங்களுக்கு பிரச்சினை வராத வரைக்கும் கமுக்கமா போயிருவாங்க, ஒங்களுக்கு பப்ளிக் பிரச்சினை வரும்போது சொல்லுவீங்க, அதுவும் முழுசா சொல்ல மாட்டீங்க - ஆப்போசிட்ல, டீலிங் பேசிக்கிட்டே கொஞ்சம் கொஞ்சமா உண்மைய சொல்லுவீங்க... ஆக - ஆக - ரெண்டு பேருமே திருட்டுல , டீலிங் வச்சிருக்கிறீங்க . . .


ஆரூர் ரங்
பிப் 27, 2025 12:22

சென்னை மாநகருக்கு குடிநீர் நீர்பிடிப்பு ஆதாரமான பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது சென்னையை தண்ணியிலாக்காடாக ஆக்கிவிடும் .


V வைகுண்டேஸ்வரன்
பிப் 27, 2025 15:10

உங்களுக்குத் தெரிந்தது, டெல்லியில் இருக்கும் ஒன்றிய அரசுக்குத் தெரிய வில்லை பாருங்கள். தெரிந்திருந்தால், "என்னய்யா இடம் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்? இது குடிநீர் பிடிப்பு ஆதாரம். எனவே, வேற இடம் பாருங்க " என்று மாநில அரசிடம் சொல்லியிருப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை