உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமபந்தி விருந்தால் பட்டியலினத்தவருக்கு அவமானம்: எழுத்தாளர் சோ.தர்மன்

சமபந்தி விருந்தால் பட்டியலினத்தவருக்கு அவமானம்: எழுத்தாளர் சோ.தர்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சமபந்தி விருந்து நடத்துவது பட்டியலினத்தவருக்கு பெரும் அவமானம்' என, 'சாகித்ய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்து உள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவு: ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள பெரிய கோவில்களில், 'சமபந்தி விருந்து' என்ற ஒன்றை நடத்துகின்றனர். இதற்கு அரசு பணம் ஒதுக்குகிறது.அதாவது, ஏதாவது ஒரு மண்டபத்தில், அரசின் செலவில் சமையல் செய்து விருந்து வைக்கின்றனர்; ஊடகங்களில் விளம்பரப்படுத்துகின்றனர். மறுநாள், 'சமபந்தி விருந்தில் அனைத்து ஜாதியினரும் சரிசமமாக அமர்ந்து விருந்து உண்டனர்' என, செய்தி வரும். ஒரு காலத்தில் பட்டியலினத்தவர்கள், தீண்டத்தகாதவர்களாக இருந்தனர்; மற்றவர்களுடன் சரிசமமாக அமர்ந்து, உணவருந்தும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது என்பதை நினைவூட்டுவதே, சமபந்தி விருந்தின் நோக்கம்.'தீண்டாமை சமூகத்தில் இல்லை; அனைவரும் சமமாகவே உள்ளனர்' என்ற கருத்தை சமூகத்துக்கு விதைக்கவே அப்படியொரு ஏற்பாடு இருந்தது. ஆனால், இன்றைக்கும் அதை கடைப்பிடிப்பது எத்தனை பெரிய அவமானம்?அன்றாடம் அனைத்து ஹோட்டல்களிலும் அனைவரும் சரிசமமாக அமர்ந்து, மூன்று வேளையும் சாப்பிடுகின்றனர். அப்படியென்றால், அது என்ன விருந்து? ஜாதியை ஒழிக்கவில்லை என்றாலும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. பொது இடங்களில் பட்டியலினத்தவர் தனிமைப்படுத்தப்படுவதில்லை.சட்ட ரீதியான பாதுகாப்பு இருக்கிறது. தனியாக தீண்டாமை ஒழிப்பு போலீஸ் இருக்கிறது. ஜாதி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அணி திரண்டு போராடுகின்றனர். அப்படியிருக்க, பழைய கால நிலைமைகளை நினைவுபடுத்தும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி, இன்றைக்குத் தேவையில்லை.பட்டியலின ஜாதி மக்களை மூலதனமாக வைத்து, கட்சி நடத்தும் ஜாதிக் கட்சித் தலைவர்களே, இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? தீண்டாமைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் இடதுசாரிகளே, நீங்கள் மவுனமாக இருப்பது ஏன்?முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு இதை கொண்டு சென்று, சமபந்தி விருந்து தேவையற்றது என்பதை நினைவூட்டி நிறுத்துங்கள். அந்தந்த மாவட்ட நிர்வாகமே முடிவெடுத்து நிறுத்தி விடலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

David DS
ஆக 18, 2025 14:33

நள்ளிரவில் வாகனம் ஓட்டிச்சென்று வாகன சோதனையில் இவர் சிக்கிய பின், அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் தான் ஒரு ரைட்டர் என்று சொன்னாராம். கான்ஸ்டபிள் எந்த போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் என்று கேட்டாராம். அதற்கு இவர் காவலரைக் குறை சொன்னார். ரைட்டர் என்றால் யார் என்று கூட தெரியவில்லை என்று. எழுத்தாளர் என்று சொல்ல இவரை எது தடுத்தது? ரைட்டர் என்றால் கவுரவமா? கான்ஸ்டபிள்லுக்கு ஸ்டேஷன் ரைட்டர் தான் நியாபகம் வரும். தகுதி இல்லாதவன் எல்லாம் தலையெடுத்து ஆடறான்.


கிருஷ்ணதாஸ்
ஆக 14, 2025 17:22

உண்மையை உரக்கச் சொல்லும் இவரைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன்!


Sridharan Venkatraman
ஆக 14, 2025 14:48

தமிழ் நாட்டின் எந்த மூலை ஆனாலும் சரி, ஒரு பிராமண வீட்டு சுப நிகழ்வு விருந்தில் சென்று பாருங்கள். எத்தனை பேர் கட்டுக் குடுமியுடன் ஆசார சிலர்களாக பரிசேஷணம் செய்து உணவு சாப்பிடுகின்றார்கள் என்று பாருங்கள். பிராமணத் துவேஷம் கட்சி நடத்த மட்டுமே என்று புரியும்.


sankar
ஆக 14, 2025 14:15

இந்து சமய அறநிலைய துறை என்பது- இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் சமய அறநிலையத்துறை என்று மாற்றப்படவேண்டும்


skrisnagmailcom
ஆக 14, 2025 12:43

சமபந்தி விருந்து என எழுதாமல் சுதந்திர தின விழா விருந்து என எழுதினால் சரியாக இருக்கும்


Sundararajan
ஆக 14, 2025 11:50

நீங்கள் சொல்வது 100% Correct


nagendhiran
ஆக 14, 2025 11:36

ஐம்பது ஆண்டுகள் ஆண்டது திராவிட கட்சிகளும் அதன் முட்டு காரர்கள்? காங்கிரஸ்தான்? இங்கு நடக்கும் அவளங்களை"வெளிவந்தா? உடனே தமிழ் மொழியை இழுத்து ஒரு அரசியல் செய்து? பாயாசம் பாஜக உள்ளே வந்துவிடும்னு சொல்லு? ஒட்டு வாங்கிடுவானுங்க? வாக்கு போட்டவனும் பாஜக உள்ள வரகூடாதுனு சாதித்தமாதிரி அடுத்த வேலையை பார்க்க போய்டுவானுங்க? இப்படி நடக்கும் தான்? அனுபவீங்க? உங்கள பார்த்து பரிதாபம்கூட படகூடாது?


Sudha
ஆக 14, 2025 10:08

வரவேற்கத்தக்கது, அதே போல என்னென்ன கொடுமை தொழில்களில் இருந்து பட்டியலினத்தவர் விடுவிக்க பட vendum என்பதையும் சொல்லுங்கள், அங்கெல்லாம் கருவிகள் செயலும் padattum, முக்கியமாக அனைவருக்கும் ஆதார வசதிகளுடன் கூடிய வருமானம், தொழில் போன்றவை உருவாக்கி விட்டு, பட்டியல் எனும் பெயரே இல்லாத நாட்டை உருவாக்கி காட்டுங்கள். ஜெய் ஹிந்த்


GMM
ஆக 14, 2025 10:07

சமபந்தி விருந்து திராவிடம் தட்டி எழுப்பிய தீண்டாமை சுவர். பட்டியலின மக்கள் வளர சாதி அரசியல் விரும்ப கூடாது. மதம் மாற கூடாது. தன் சமூக பெண்ணை திருமணம் செய்ய வேண்டும். கல்வி, வேலை அரசு இட ஒதுக்கீடு மறுக்க வேண்டும். சாதி அமைப்பு சமூக வாழ்வியல் வளர்ச்சிக்கு உதவும். சாதி, மத மோதலை உருவாக்கிய கிழக்கிந்திய கொள்ளைக்கார கம்பெனி வருமுன், இந்திய செல்வ வளம் உலகின் மொத்த வளத்தில் 25 சதம் கொண்டு இருந்தது. சாதி வீட்டிற்கு மட்டும். மோதலை உருவாக்க நாட்டிற்கு கொண்டு செல்வது காங்கிரஸ், திமுக.


V Venkatachalam
ஆக 14, 2025 09:53

பொது இடங்களில் பாகுபாடு இல்லை என்பது 100 விழுக்காடு சரி. சம பத்தி விருந்து ன்னு பேர் வைச்சிட்டு வெறும் விளம்பரம் பண்ணிகிட்டு இருக்கானுங்க.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 14, 2025 11:18

சம பந்தி விருந்து என்ற பெயரில் செய்யும் விளம்பரம் குறைவுதான். ஆனால் அடிக்கும் கொள்ளைதான் அமோகம். வெறும் பொங்கலையும் தயிர்சாதத்தையும் போட்டுவிட்டு சாம்பார் ரசம் கூட்டு பொரியல் போட்டதாக கணக்கு எழுதி அடிக்கும் கொள்ளை சொல்லி மாளாது. இன்னும் சொல்லப்போனால் இந்தக் கொள்ளையை மனதில் எண்ணியே சமபந்தி விருந்து திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை