மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
2 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
5 hour(s) ago | 33
ஜனவரி 16, 1978ஆந்திர மாநிலம், ராயலசெருவு கிராமத்தில், அகர்சிங் - ஆதியம்மாள் தம்பதியின் மகனாக, 1924, அக்டோபர் 15ல் பிறந்தவர் பீம்சிங். தமிழ் திரையுலகின் இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் - பஞ்சுவில், கிருஷ்ணன், இவர் மனைவி ஷோபனாவின் அண்ணன் என்பதால், அவர்களிடம் உதவி, 'எடிட்டராக' சேர்ந்து, இயக்குனராக உயர்ந்தார். படம் பார்க்க ரசிகர்கள் குடும்பத்துடன் வர வேண்டும் என்ற குறிக்கோளுடைய இவர், உணர்வுகளுடன் பிணைந்த பாத்திரங்களை அறிமுகம் செய்தார்.எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிக்க, கருணாநிதி கதை - வசனம் எழுத, இவர், அம்மையப்பன் என்ற படத்தை இயக்கினார். படம் சுமாரான வெற்றி தான் பெற்றது. விடாமுயற்சியாலும் தன் திறமையாலும், ராஜா ராணி, பாகப்பிரிவினை, சகோதரி, பொன்னு விளையும் பூமி, படிக்காத மேதை, களத்துார் கண்ணம்மா உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களை உருவாக்கி, பாத்திரங்களை உணர்வுப்பூர்வமாக்கினார். குடும்பப்பட இயக்குனராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இவரின் பாசமலர் திரைப்படம், அண்ணன் - தங்கை பாசத்துக்கு அகராதியானது. இவர், தன், 54வது வயதில், 1978, இதே நாளில் மறைந்தார்.பி.லெனின், பி.கண்ணன் எனும் திரைக்கலைஞர்களின் தந்தையான பீம்சிங் மறைந்த தினம் இன்று!
2 hour(s) ago | 3
5 hour(s) ago | 33