உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

ஜனவரி 31, 1950செங்கல்பட்டு மாவட்டம், கொளத்துாரில், 1876, ஆகஸ்ட் 1ல், ராமானுஜாச்சாரியாரின் மகனாக பிறந்தவர் வரதாச்சாரி. திருவையாறில் இருந்த பட்டணம் சுப்பிரமணிய அய்யரிடம், இவரும், சகோதரர்களும் குருகுல முறையில் கர்நாடக இசை கற்றனர். சென்னை, காலடிப்பேட்டையில் குடியேறி,, 'காலடிப்பேட்டை சகோதரர்கள்' என்ற பெயரில் கச்சேரி செய்தனர். குடும்ப சூழலால், கேரள மாநிலம், கோழிக்கோட்டில் சர்வேயராக பணியேற்றார். அங்கு கோவில் விழாக்கள், நிகழ்ச்சிகளில் பாடினார். மைசூரில் நவராத்திரிக்காக இவர் செய்த கச்சேரியை கேட்ட மைசூர் மகாராஜா, இவரை அரசவை பாடகராக்கினார். அங்கு, நுட்பமான பல்லவிகளை நான்கு மணி நேரம் பாடினார்; அப்போது, அவர், இவருக்கு, 'டைகர்' எனும் பட்டம் சூட்டினார். பாடகர், பாடலாசிரியர், இசை பரம்பரையின் குரு, நகைச்சுவையான இசைமேதை எனும் பன்முகம் கொண்டவர். இவர், 1950ல் தன், 73வது வயதில் இதேநாளில் மறைந்தார். இவரின் நினைவாக, அடையாறு அண்ணா காலனியில், 'டைகர் வரதாச்சாரி தெரு' என, பெயரிடப்பட்டுள்ளது. மியூசிக் அகாடமியின், 'சங்கீத கலாநிதி' விருதாளர் மறைந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ