உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்னட மொழி, இனம் எப்போது எந்த காலகட்டத்தில் தோன்றியது; சீமான் கேள்வி

கன்னட மொழி, இனம் எப்போது எந்த காலகட்டத்தில் தோன்றியது; சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: கன்னட மொழி எப்போது தோன்றியது, கன்னடம் இனம் எந்த காலகட்டத்தில் தோன்றியது என்பதை வரலாற்று பூர்வமாக சொல்லுங்க? என்று நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது, செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விக்கு சீமான் பதிலளித்து பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hfipfney&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கர்நாடகாவில் தக் லைப் படத்தை வெளியிட மாட்டோம் என்று கன்னடர்கள் கூறுவது குறித்த கேள்விக்கு, பதில்; கர்நாடகாவில் தானே தக் லைப் படம் வெளியாகாது. உலகம் முழுவதும் 13 கோடி பேர் தமிழர் பரவி இருக்காங்க. கன்னடம் மொழி பற்றி பேசியதால் கமல்ஹாசனின் படத்தை தடுக்கறீங்க. தம்பி, விஜய் என்ன பண்ணாரு. அவர் படத்திற்கு எதுக்கு தடை விதித்தீர்கள். உங்களுக்கு தமிழர் என்றாலே ஒரு வெறுப்பு.அதே கர்நாடகாவில் இருந்து வந்த ஈ.வெ.ரா.,வுக்கு தமிழ் என்றாலே வெறுப்பா இருக்கு. சனியன் தமிழை ஒழிங்க என்றார். ஆனால், கன்னடரான அவரை நாங்க தமிழர் தலைவரா ஏற்க வேண்டும். எப்படி இருக்கு பாருங்க. தமிழ் என்றாலே அவ்வளவு கசப்பு, அருவருப்பா இருக்கு அவங்களுக்கு. தமிழில் இருந்து பிறந்த மொழி என்பதை ஏன்ற வரலாற்றை ஏற்கவே கன்னடர்களுக்கு வெறுப்பா இருக்கு. நாங்க தமிழர்கள். எங்களின் தோற்றுவாய் எது, எங்களுடைய தொடக்கம் எது, மொழியின் தொடக்கம் எது என்று வரலாற்று பூர்வமாக சொல்றோம். அதைப் போலவே, கன்னட மொழி எப்போது தோன்றியது, கன்னடம் இனம் எந்த காலகட்டத்தில் தோன்றியது என்பதை வரலாற்று பூர்வமாக சொல்லுங்க? அவங்களுக்கு ஒரு பிரச்னை பண்ண வேண்டும். அதற்காக, இப்படி பண்ணுகிறார்கள், எனக் கூறினார். ஈ.வெ.ரா.வுக்கு ஜாதி சாயம் பூசுவதாக த.வெ.க., தலைவர் விஜய் கூறியது பற்றிய கேள்விக்கு; பதில்; அது எல்லாம் ஒன்றுமில்லை. ஈ.வெ.ரா.வே ரொம்ப நாட்களாக நாயக்கர் என்று தான் கையெழுத்து போட்டார். இங்கு வெளியான ஈ.வெ.ரா., படம், ஆந்திராவில் நாயக்கர் என்ற பெயரில் தான் வெளியானது. அவர் எழுதிய கடிதத்தில் எல்லாம் நாயக்கர் என்று தான் போட்டுள்ளது. தம்பி விஜய் ஏதோ சொல்லுகிறார், என்றார். தி.மு.க., கூட்டணியில் வைகோவுக்கு எம்.பி., பதவி கொடுக்காதது குறித்த கேள்விக்கு, பதில்; தி.மு.க., தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். கமல்ஹாசன் எம்.பி., வேண்டும் என்று பேசி முடிவெடுத்தார்கள். அதேபோல, வைகோவும் பேசி இருக்க வேண்டும். தி.மு.க.,வில் என்னை தேர்வு செய்யுங்கள் என்று வைகோ கேட்க முடியாது. ஏனெனில் இவர் இன்னொரு கட்சியின் தலைவர், எனக் கூறினார். பா.ம.க., உட்கட்சி மோதல் குறித்த கேள்விக்கு,பதில்; பா.ம.க.,வில் ஏற்பட்டுள்ள மோதலை பார்க்கையில் கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஐயா, இவ்வளவு தூரம் காயம் பட்டிருக்கிறார் என்பதை பார்ப்பது வேதனையளிக்கிறது. இந்த காயங்கள் ஆறிவிடும் என்று உறுதியாக நம்புகிறேன். சின்ன சின்ன மன வருத்தங்கள் வந்து உள்ளது. இருவருமே அருகருகே அமர்ந்து பேச சூழல் இல்லாததால், அதனை பொதுவெளியில் பேச வேண்டியதாயிற்று. கட்சிக்குள் இருக்கும் சின்ன முரண், சரியாயிடும், என்றார். நாளை முதல்வர் வருகையால் சாலைகள் எல்லாம் சீரமைக்கப்பட்டுள்ளது பற்றிய கேள்விக்கு,பதில், அடிக்கடி முதல்வர் ஒவ்வொரு ஊருக்கும் வர வேண்டும் என்று வாழ்த்துங்கள். அப்போது தான், எல்லா ஊருக்கும் சாலைகள் பளீச் பளீச் என்று வரும் எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Canchi Lokesh
ஜூன் 04, 2025 19:22

நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள். ஒருத்தன் தினமும் பேப்பர்ல பேரு வர என்னென்னவெல்லாம் பேசறான் பாருங்க. மீடியாகாரங்க எதிர்கட்சிகிட்ட கூட இவ்வளவு கேள்வி கேக்கறதில்ல அவங்களுக்கு அவ்வளவு பாசம் தம்பி மேல


Bhaskaran
ஜூன் 02, 2025 14:01

கோபால் சாகும்வரை எம்பியாகவே இருக்கும்னுஆசை படற ஆள்


கோபாலன்
மே 30, 2025 21:03

புதிய வடிவேல் வாழ்க! கால்டுவெலுக்கு பிறகு இவர் தான் மொழியியல்...... வல்லுநர். ஹாஹாஹா...


Natarajan Ramanathan
மே 30, 2025 20:58

உலகில் முதலில் தோன்றிய மூன்று மொழிகள் தமிழ், சமஸ்க்ரிதம் மற்றும் ஹீப்ரு மொழிகளே...


Ramesh Sargam
மே 30, 2025 20:29

இவனும் கர்நாடகாவில் இனிமேல் கால்பதிக்க முடியாது.


தமிழ்வேள்
மே 30, 2025 19:57

பல்லவர்களின் சமகால சாளுக்கிய மன்னர்கள் வழங்கிய செப்பேடுகள் & கல்வெட்டுகள் பிராகிருதம் / சம்ஸ்கிருதம் மற்றும் கன்னட மொழியில் வழங்கப்பட்டன.காலம் பொ.யு ஐந்து ஆறாம் நூற்றாண்டுகள். கன்னடத்தில் தமிழின் தாக்கம் இருக்கலாம்... திராவிட மொழிக்குடும்பத்தை சார்ந்த மொழி.. ஆனால் தற்போது நைசாக கன்னட ராமசாமியின் தமிழ் பற்றிய கமெண்ட் களை சொல்லி கோர்த்து விட்டது நல்ல செயல்.. ராமசாமி கும்பல் நெளியும்..தமாசாக இருக்கும்..


vbs manian
மே 30, 2025 19:40

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகின்றார்.. .


sankaranarayanan
மே 30, 2025 19:04

அடிக்கடி முதல்வர் ஒவ்வொரு ஊருக்கும் வர வேண்டும் என்று வாழ்த்துங்கள். அப்போது தான், எல்லா ஊருக்கும் சாலைகள் பளீச் பளீச் என்று வரும் எனக் கூறினார். இல்லை இல்லை முதல்வர் அங்கே வருமுன் இரவோடு இரவாக புதிய சாலைகள் மேடு பள்ளம் நிரப்பாமல் போடுவார்கள் புதிய பொலிவுடன் அன்று மட்டும் விளங்கும் முதல்வர் அங்கே வந்து சென்ற மறு நிமிடமே சாலைகளில் பள்ளங்கள் தானாகவே தோன்றும். கட்டடங்கள் இடிந்து விழும். டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் பன்மடங்காகும்.


K V Ramadoss
மே 30, 2025 17:50

இவர் வேற உள்ள புகுந்து குட்டையை குழப்பறாரு, தேவையில்லாமல்..


கன்னடத்தமிழன்
மே 30, 2025 16:26

அப்ப்ராணிங்களா... சூரியநை சுற்றி வரும் கிரகங்கள் தோன்றும் முன்ன் வெறும் தூசு மண்டலமாயிருந்திச்சு. பிறகு அங்கங்கே கொஞ்சம் தூசி சேர்ந்து புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனின்னு உருவாச்சு. இதில் சேராமல் நிறை விண்கற்களும் தனித்தனியே உலாத்திக்கிட்டிருக்கு. மொழிகளும் அப்பிடித்தான். எத்லேருந்து எது வந்திச்சுன்னு உறுதியா சொல்ல முடியாது. எல்லா மொழிகளும் சேர்ந்து இந்தித் திணிப்பை எதிர்க்காம உட்டுட்டு, இப்பிடி சண்டை போடுங்க. வெளங்கிடும். முதல்ல உங்க மொழி ஆராய்ச்சியை முய்ட்சை கட்டி வெச்சிட்டு, தமிழன்னைக்கு வெற்றி. கன்னடாம்பாவுக்கு ஜெயவாஹதே. சொல்லிப் பழகுங்கடா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை