உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுச்சேரி தி.மு.க., பொறுப்பாளராக ஜெகத்ரட்சகன்

புதுச்சேரி தி.மு.க., பொறுப்பாளராக ஜெகத்ரட்சகன்

சென்னை: தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: மத்திய பா.ஜ., அ ரசுக்கு துணை நிற்கும் புதுச்சேரி பா.ஜ., கூட்டணி அரசிடமிருந்து, புதுச்சேரியை மீட்டு, 'மண், -மொழி, -மானம்' காக்க, தி.மு.க., சார்பில் 'உடன்பிறப்பே வா' பிரசாரம் முன்னெடுக்கப்படும். புதுச்சேரியின் 30 சட்டசபை தொகுதிகளிலும், வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை, தி.மு.க., உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். இப்பணியை ஒருங்கிணைத்து செயலாற்ற, தி.மு.க., கொள்கைப்பரப்பு செயலர் ஜெகத்ரட்சகன் எம்.பி., பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். புதுச்சேரியில் உள்ள, கட்சி நிர்வாகிகள் அனைவரும், உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தில் முழு மூச்சோடு பணியாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை