உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெகபர் அலி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவக்கம்

ஜெகபர் அலி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவக்கம்

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களுரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி. சட்டவிரோத கல் குவாரிகளுக்கும், கனிம வள கொள்கைக்கு எதிராக போராடி வந்த ஜகபர்அலி கடந்த 17ம் தேதி குவாரி உரிமையாளர்களா லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.இதில், தொடர்புடைய குவாரி உரிமையாளர் இருவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற டி.ஐ.ஜி., உத்தரவிட்டார்.அதன்படி, சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., ஜென்னிஸ்இளங்கோ தலைமையில், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் நேற்று ஜெகபர்அலி கொலை செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு, ஜெகபர்அலியின் வீட்டில் சென்று அவரது மனைவியிடம் முதற்கட்ட விசாரணை செய்தனர்.இதற்கிடையே, ஜெகபர் அலி குடும்பத்திற்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் 1 லட்சம் ரூபாய் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ