உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை விண்ணப்பம் வரவேற்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை விண்ணப்பம் வரவேற்பு

சென்னை:'ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய, வெல்டர், பைபிங் பேப்ரிகேட்டர், பைபிங் பிட்டர் உள்ளிட்ட பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மூன்று ஆண்டு பணி அனுபவத்துடன், 44 வயதுக்குள் இருக்க வேண்டும்.இதற்கான நேர்காணல், வரும் ஜன.,31, பிப்.,1ம் தேதி காலை 9:00 மணிக்கு, சென்னை, கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டையில் அமைந்துள்ள, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் நடக்க உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 'www.omcmanpower.tn.gov.inஇணையதளம் அல்லது 044-22502267, 95662 39685 எண்களை தொடர்பு கொள்ளலாம்' என, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை