விமானப்படையில் வேலை வாய்ப்பு
சென்னை இந்திய விமானப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய விமானப் படையில் அதிகாரி, தரைப்பிரிவு, தொழில்நுட்பம், நிர்வாகம், கணக்கு உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிகளில் சேர, வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு அடிப்படையில், தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்ப படிவம் மற்றும் கூடுதல் விபரங்கள், careerairforce.nic.inஎன்ற இணையதளத்தில் உள்ளன.