உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!

இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் 'அரட்டை'யில் தினமும் லட்சக்கணக்கான பேர் இணைந்து வருகின்றனர். பல்வேறு சிறப்புக்களை கொண்டுள்ள 'அரட்டை' செயலியை இன்றே டவுண்லோடு செய்யுங்கள், வாசகர்களே!இன்றைய உலகில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் மிகுந்திருக்கிறது. தற்போது பிரபலமாக இருக்கும் சமூக வலைதளங்கள் அனைத்தும், மேற்கத்திய நாட்டினரால் தயார் செய்யப்பட்டவை. இவை, நமது சட்டங்களை பொருட்படுத்துவதில்லை; பயனர் தகவல்களை தங்கள் நாட்டில் சேகரிப்பது மட்டுமின்றி, அவற்றை பலவிதமான பயன்பாடுகளுக்கும் உட்படுத்துகின்றனர்.இத்தகைய சூழ்நிலையில் தான், அமெரிக்க அதிபரான டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கு தாறுமாறாக வரி விதிப்பை செய்து அதிருப்தியை சம்பாதித்தார்.இதனால் மக்கள் மத்தியில் அந்நாட்டு தயாரிப்புகளான சமூக வலைதளங்களுக்கு மாற்று வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக, 'ஸோகோ' நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருந்த 'அரட்டை' செயலி மீது கவனம் திரும்பியது.தமிழரான ஸ்ரீதர் வேம்பு தயாரித்து வெளியிட்டுள்ள இந்த செயலி, வாட்ஸ்அப், டெலிகிராமுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடியது. அவற்றில் இருக்கும் பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன; அவற்றில் இல்லாத அம்சங்களும் இதில் உள்ளன.குறைந்த இணைய வேகம் இருக்கும் இடத்திலும், அரட்டை செயலி வேலை செய்யும். சாதாரண ஸ்மார்ட் போனில் கூட பயன்படுத்த முடியும். ஆன்ட்ராய்டு டிவியிலும் இதை பயன்படுத்த முடியும்.இத்தகைய அம்சங்களால், நெட்டிசன்கள் பலரும் விரும்பி டவுண்லோடு செய்ய ஆரம்பித்தனர். பயன்படுத்திப் பார்த்த பலரும், அதிக 'டேட்டா' உறிஞ்சும் மேற்கத்திய சமூக வலைதளங்களுக்கு மாற்றாக, 'அரட்டை' செயலி இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டனர்.இதன் காரணமாக, ஒட்டு மொத்த இந்தியர்களின் கவனமும் அரட்டை செயலி மீது திரும்பியது. விளைவாக, நாளொன்றுக்கு சில ஆயிரம் புதிய பயனர்கள் சேர்ந்து கொண்டிருந்த 'அரட்டை' செயலியில் இப்போது தினமும் லட்சக்கணக்கான பேர் இணைந்து வருகின்றனர்.தங்கள் செயலி மீது மக்கள் கவனம் திரும்பியிருப்பதை புரிந்து கொண்ட ஸோகோ நிறுவனம், அதை மேம்படுத்த தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. பல்வேறு புதிய அம்சங்களையும் இணைக்க உள்ளது.எனவே, நீங்களும் இந்த செயலியில் இணைந்து சுதேசி சமூக வலைதள அனுபவத்தை பெறலாம்.

அரட்டை

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா, 'பெருமையுடன் இன்று அரட்டை செயலியை பதிவிறக்கம் செய்து விட்டேன்,' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு அரட்டை செயலியும் ஆனந்த் மஹிந்திராவை வரவேற்பதாக பதிலளித்து இருந்தது. மேலும், நீங்கள் அரட்டை செயலியை பயன்படுத்துவது தங்களுக்கு பெருமையளிப்பதாகவும், உங்களின் ஆதரவு மிகவும் சிறப்பானது என்று குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், ஆனந்த் மஹிந்திரா விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவை டேக் செய்து, அரட்டை செயலியின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலளித்துள்ளார். அவரது பதிவு: அரட்டை செயலியை மேம்படுத்துவது தொடர்பாக எங்களின் தென்காசி அலுவலகத்தில் அரட்டை இன்ஜினியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தேன்.அப்போது, எங்களின் குழுவைச் சேர்ந்த ஒருவர் உங்களின் (ஆனந்த் மஹிந்திரா) பதிவை காண்பித்தார். நன்றி, இது எங்களுக்கு மேலும் உத்வேகம் கொடுக்கிறது, என்று பதிவிட்டுள்ளார். ஸ்ரீதர் வேம்புவின் இந்தப் பதிவுக்கு, 'நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துவோம்' என்று ஆனந்த் மஹிந்திரா ரிப்ளை கொடுத்துள்ளார்.

உடனுக்குடன் செய்தி வழங்கும் தினமலர் சேனல்

சுதேசி சமூக வலை தளமான ' அரட்டை' செயலியில் செய்திகளை வழங்கும் முதல் நாளிதழ் தினமலர் நாளிதழ் தான். நாளிதழ்கள் மட்டுமின்றி, வார இதழ்கள், தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களிலும் முதலாவதாக, தினமலர் நாளிதழ் இந்தப் பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேனல் மூலம் பிரேக்கிங் நியூஸ், அன்றாட நிகழ்வுகள், முக்கிய செய்திகள், வீடியோ செய்திகள் உள்ளிட்டவை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். இந்த சேனலில் இணைவதற்கு https://web.arattai.in/ என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருத்து சொல்லுங்க வாசகர்களே!

சுதேசி சமூக வலைதளமான 'அரட்டை'யில் நீங்களும் இன்றே இணைந்து கொள்ளலாம், வாசகர்களே! இதில், இன்னும் என்னென்ன வசதிகள் இருந்தால், பயனுள்ளதாக இருக்கும் என்று கருத்துக்களையும் இங்கே கமென்ட் ஆக பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

மணி முருகன்
அக் 04, 2025 23:01

அருமை வாழ்த்துக்கள் ஒரு வேண்டுகோள் செயலி உள்நுழைவுக்கு அவரவர் தாய்மொழியில் இமெயில் பெற வசதி செய்யும் வசதி இருந்தால் நன்று


Sundar K. Ram
அக் 04, 2025 22:30

வரவேற்கத்தக்க விஷயம்தான். ஆனாலும் என் சந்தேகம் என்னவென்றால் வெளி நாடுகளில் வாழும் சொந்தங்களும், நண்பர்களும் வாட்ஸ்அப் மட்டுமே உபயோகிக்கும் சூழ்நிலையில் இது எந்தளவு பயனுள்ளதாக இருக்கும்?


Chandhra Mouleeswaran MK
அக் 04, 2025 20:53

பாராட்டுக்கள் தினமலர் "அரட்டை" யைஅறிமுகம் செய்வதற்கு...இதில் ஒரு பெரிய வசதி இருக்கிறது. அது இந்த "அரட்டை" யை அப்படியே வேறு துணை மென்பொருட்களைப் பயன்படுத்தாமல் நேரடியாக நமது டெக்ஸ்டாப் மற்றும் லாப் டாப் கம்ப்யூட்டர்களின் பயன்படுத்தலாம் என்பது மிகவும் சுலபமான நல்ல வசதி. அப்படிப் பயன்படுத்தும் போது, நம்மால் மிகவும் வேகமாக எளிதாகக் கருத்துக்களையும் தகவல்களையும் ஆவணங்களையும் பதிவேற்றி இறக்கிக் கொள்ளலாம் "டச் டைப்பிங்" இல் நல்ல பழக்கம் உடையவர்களுக்கு இன்னும் வேகமாக வேலை செய்வதற்கு இந்த டெஸ்க்டாப் இன்ஸ்டால்லேஷன் மிகவும் உதவியாக இருக்கும்


Iyampermual Ganapathy
அக் 04, 2025 20:47

தமிழகத்தின் பாரத்த்தின் பெருமை மிகவும் பயனுள்ள செயலி


Chandhra Mouleeswaran MK
அக் 04, 2025 20:42

அரட்டை செயலியில் இணையுங்கள் வாசகர்களே மிகவும் சரியான சமயத்தில் வாசகர்களுக்கு நமது சுதேசி "அரட்டை" யை அறிமுகம் செய்வதற்கு மிக்க நன்றி தினமலர் நான் சில காலமாகப் பயன்படுத்தி வருகிறேன். வாட்ஸப் மற்றும் டெலெக்ராம் மற்றும் பிற ஆப்களையும் இதுவரை பயன்படுத்தி இருக்கிறேன். எல்லாம், சர்ர்ர்ரியாக "திருட்டுப் பசங்கள்" "எண்டு டு என்று எங்க்ரிப்ஷன்" என்றும் "ஆதலால், இவற்றின் அடக்கத்தை யாருமே பார்க்கவோ திருத்தவோ முடியாது" என்றும் உதார் விட்டுக் கொண்டிருக்கும் இவை, பயனர்களின் அந்தரங்கத் தகவல்களையும் புகைப் படங்களையும் சகட்டு மேனிக்கு விற்றுக் காசு பார்க்கின்றன என்பது உலகறிந்த ரகசியம் அதுவும் இந்த "ஏஐ" ஆப்கள் வந்தபிறகு படங்கள் சந்தைக்கடை வியாபாரம் போல விற்கப் படுகின்றன எங்களுக்கு இந்த "அரட்டை" முன்பே அறிமுகம் ஆன ஒன்றாக இருந்தாலும் பலருக்கும் ஏனோ இதன்மீது இதுவரை ஆர்வம் வரவில்லை. என்றாலும் ட்ரம்பெட்டு மாம்மா புண்ணியத்தால் சட்டென்று மக்களின் மனத்தில் குடிபுகுந்து இருக்கிறது . ஸ்ரீதர் வேம்பு மிகவும் கவனத்துடன் இந்த "அரட்டை" யைத் தன்னிச்சையான "க்ராஸ் ப்ளாட்ஃபர்ம் தகுதியுடன்" ஒரு அப்ளிக்கேஷனாக வளர்க்கவேண்டும். இல்லாவிட்டால் இப்போது ஆர்வத்துடனும் நாட்டுப் பற்றிற்காகவும் இணையும் இலட்சக்கணக்கான பயனர் வெறுப்படைந்து விடுவார்கள்


அ. மயில்சாமி சூலூர்
அக் 04, 2025 20:22

நம் நாடு, அதிகளவு கணினிப் பொறியாளர்கள், மென்பொருள் உருவாக்குபவர்களாக இருந்தாலும், மக்களாகிய நாம் இன்னும் வெளிநாட்டுச் சமூக ஊடகத் தளங்களையே சார்ந்திருக்கிறோம். நம் நாட்டிற்கான, நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அரட்டை செயலி நமது அறிவின், பெருமையின் அடையாளம். பெருமளவில் பயன்படுத்தி சுதேசிப் பயன்பாட்டை வலுப்படுத்துவோம். நாட்டை முன்னிறுத்துவோம்


Naga Subramanian
அக் 04, 2025 20:02

அருமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை