உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக் ஷய திருதியைக்கு சலுகை ஜோய் ஆலுக்காஸ் அறிவிப்பு

அக் ஷய திருதியைக்கு சலுகை ஜோய் ஆலுக்காஸ் அறிவிப்பு

சென்னை:ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம், அக் ஷய திருதியை முன்னிட்டு, 'கோல்டன் பிராஸ்பெரிட்டி' விளம்பர பிரசாரத்தையும், மே, 1ம் தேதி வரை, ஆபரணங்கள் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது.இந்த கால கட்டத்தில் ஜோய்ஆலுக்காஸ் வாடிக்கையாளர்கள், 75,000 ரூபாய் மற்றும் அதற்கு மேல் வைரம், வெட்டப்படாத வைரங்கள் மற்றும் பிளாட்டினம் நகைகள் வாங்கினால், 500 மில்லி கிராம், 24 காரட் தங்கக்கட்டியை இலவசமாக வழங்குகிறது. ஆடம்பரமான நகைகளில் முதலீடு செய்ய விரும்புவோர், 1.50 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் வைரம், வெட்டப்படாத வைரங்கள், பிளாட்டினம் நகைகள் வாங்கினால், ஒரு கிராம், 24 காரட் தங்கக்கட்டி அல்லது லட்சுமி விக்ரஹம் இலவசமாக கிடைக்கும். கூடுதலாக இம்மாதம், 30ம் தேதி, ஜோய் ஆலுக்காசுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பிரத்யேக சலுகையை பயன்படுத்தி, 75,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள தங்க நகைகளுடன், 200 மில்லி கிராம், 22 காரட் தங்க நாணயத்தை இலவசமாக பெறலாம். 10,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள வெள்ளி நகைகளுக்கு, 5 கிராம் வெள்ளி நாணயத்தை இலவசமாக பெறலாம். ஜோய் ஆலுாக்காஸ் தங்க விலை பாதுகாப்பு பெற, சிறப்பு முன்பதிவு சலுகைகளை அளிக்கிறது. இதன் வாயிலாக, 10 சதவீதம் முன்கூட்டியே செலுத்தி தங்கம் விலையை பதிவு செய்யலாம். வாங்கும் நாளின் விலை அல்லது பதிவு செய்த விலை இரண்டில் குறைவானதை தேர்வு செய்யலாம். பழைய தங்க நகை மாற்றுவதற்கு, பூஜ்ய சதவீதம் கழிவு வழங்கப்படுகிறது. இதுகுறித்து, ஜோய்ஆலுக்காஸ் குழும தலைவர் ஜோய் ஆலுக்காஸ் கூறியதாவது:கோல்டன் பிரோஸ்பெரிட்டி பிரசாரத்தின் வாயிலாக, எங்கள் வாடிக்கையாளர்களுடன், அக் ஷயதிருதியை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். குடும்பங்கள் ஒன்றிணைந்து, தங்கத்தில் முதலீடு செய்ய, இது ஒரு சிறப்பான நேரம். நேர்த்தி மற்றும் தரத்துடன் சிறந்த நகைகளை அளிக்கிறோம். நீடித்த முதலீட்டை செய்ய அக் ஷய திருதியை சரியான நேரம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை