உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெ.பி.,நட்டா பதவிகாலம் ஜூன் வரையில் நீட்டிப்பு?

ஜெ.பி.,நட்டா பதவிகாலம் ஜூன் வரையில் நீட்டிப்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ.,தேசிய தலைவர் ஜெ.பி.,நட்டாவின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.டில்லியில் பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் பிரதமர் மோடி ,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் ஜெ.பி.,நட்டாவின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் பா.ஜ., தேசிய தலைவராக அமித்ஷாவிடம் இருந்து பெற்றார். 2023-ம் ஆண்டு ஜனவரியில் முடிவடைந்தது.இருப்பினும் நட்டா பா.ஜ., தலைவராக இருந்த கால கட்டத்தில் உ.பி., குஜராத், உத்தரகண்ட், ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் வரும் மே மாதத்திற்குள்ளாக பொது தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பா.ஜ., 370 இடங்கள் முதல் 400 இடங்களை வரையில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது.இதனையடுத்து நட்டாவின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் வரையில் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

shyamnats
பிப் 19, 2024 10:43

இதையே காரணமாக சொல்லி, சாமி முதல் பலர், பா ஜாவில் ஜனநாயகம் இல்லை என்பது போல் விமரிசனம் செய்கிறார்கள். ஆனால், குடும்ப வாரிசு அரசியல் கொண்ட மற்ற அரசியல் கட்சிகள் - தி மு க, கான் கிராஸ் பாமக, போன்றவை - இதை பற்றி பேசுவதற்கே தகுதியற்றவர்கள்.


venugopal s
பிப் 18, 2024 21:36

பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோற்று விட்டால் ஒரு பலிகடா வேண்டும் அல்லவா?


ஆரூர் ரங்
பிப் 18, 2024 21:08

தேர்தல் நேரத்தில் எக்கட்சியும் தலைமையை மாற்றுவதில்லை. புதியவர் பதவியேற்று செட்டில் ஆக சில மாதங்கள் ஆகும் என்பது காரணம். இன்னொன்று லோக்சபா தேர்தலில் நிற்பவர்கள் மற்ற இடங்களில் கவனம் செலுத்தயியலாது.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ