உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஜி அமைச்சர் மீதான வழக்கில் உத்தரவை மாற்ற முடியாது: நீதிபதி திட்டவட்டம்

மாஜி அமைச்சர் மீதான வழக்கில் உத்தரவை மாற்ற முடியாது: நீதிபதி திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கும்படி பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி.இவர் வாயிலாக, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சாத்துாரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம், அ.தி.மு.க., முன்னாள் பிரமுகர் விஜய நல்லதம்பி, பல்வேறு தவணைகளில், 30 லட்சம் ரூபாய் வரை பெற்று உள்ளார். வேலை பெற்றுத் தராததால், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் புகார் அளித்தார்.அதன்படி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2021 முதல் நிலுவையில் உள்ள வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, ரவீந்திரன் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதோடு, இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால், வழக்கு விசாரணையை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கும்படி, நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றியதை எதிர்த்து தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதால், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க முடியாது' எனக்கூறி, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து, நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Murthy
ஏப் 30, 2025 11:23

இப்போது இருக்கும் அமைச்சர்கள் ...முன்னாள் அமைச்சர்கள் என்று எல்லோரையும் உள்ளே போடுங்கப்பா ..... தேர்தல்வரை உள்ளே இருக்கட்டும் இந்த கொள்ளையர்கள் .


பாமரன்
ஏப் 30, 2025 10:39

டாடி கிட்ட சொன்னால் போதுமே... போங்க போங்க வாஷிங் மிஷுனு ரெடி பண்ணனும்...


GMM
ஏப் 30, 2025 10:29

நான் தான் விசாரிப்பேன் என்று நீதிபதி, சிபிஐ, மாநில லஞ்ச.. துறை , நிர்வாக துறை , சிறப்பு குழு, சட்ட பேரவை , மனித உரிமை போன்ற அமைப்புகள் ஒருவருக்கு ஒருவர் வழக்கு தொடுத்து ஐ நா சபையில் தீர்ப்பு பெற்று அதன் அடிப்படையில் விசாரித்தால், தாவா புரியாது. தீர்ப்பு சொல்வது எளிது.


TRE
ஏப் 30, 2025 10:03

மாஜிக்கு களி நிச்சியம் போல புடிச்சி உள்ளபோடுங்க சீக்கிரம் இவர திருட்டுப்பய எத்தனை பேரை ஏமாத்தி இருக்கான் வேலை வாங்கி தரேன்னு


எம். ஆர்
ஏப் 30, 2025 09:10

பாவம் இவனும் சுப்ரீம் கோர்ட்டு வாசலில் 3 வருசம் பாய் போட்டு படுத்து படாத பாடு பட்டான் இவனுக்கு இன்னும் பாவம் விடிந்தபாடில்லை


Padmasridharan
ஏப் 30, 2025 09:02

ஒருவரிடமே 30 லட்சம் வாங்கியதால் மாட்டிக்கிட்டாரு. ஆனால் இதே போல் வெளி நாடுகளுக்கு அனுப்பிகிறேன் என்று பல இளைஞர்களை தலா ஒவ்வொருவரிடமும் 4-5 லட்சங்கள் வாங்கி ஏமாற்றிக்கொண்டிருக்கும் சிலரும் இன்னும் மாட்டாமல் இருக்கின்றனர். இந்த இளைஞர்களும் புகார் அளிப்பதில்லை


அன்பே சிவம்
ஏப் 30, 2025 08:41

1).Number இரண்டு திருடர்கள் கூட்டம். 2). தமிழ்நாட்டில் ரெண்டே ரெண்டு பிராப்ளம் மட்டுமே உள்ளது. 3). ஒன்று திருடர்கள் கூட்டம். 4). இரண்டாவது ...கள் கூட்டம்.