உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் நாளை தீர்ப்பு

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் நாளை தீர்ப்பு

சென்னை: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மேல்முறையீடு மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரம்பியல் டாக்டர் சுப்பையா; சென்னையில் மருத்துவராக பணிபுரிந்தார். 2013-ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போது, அவரை கூலிப்படையினர் வெட்டிக் கொன்றனர். நிலப் பிரச்னை தொடர்பாக நடந்த இவ்வழக்கில் ஏழு பேருக்கு துாக்கு தண்டனையும், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.துாக்கு தண்டனையை உறுதி செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பும், துாக்கு தண்டனையை எதிர்த்து ஏழு பேரும், ஆயுள் தண்டனையை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்தனர்.இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில், கடந்த சில மாதங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தன. போலீஸ் தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் பிரபாகரன் வாதாடினார்.பின், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பில், மும்பை வழக்கறிஞர் சவுத்ரி வாதாடினார். இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் நாளை (ஜூன் 14) தீர்ப்பு வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sree
ஜூன் 13, 2024 21:06

பாவம் நீதிபதிகள் தீர்ப்பு மட்டும்தான் கொடுக்க முடியும். அடுத்த நீதிபதிகள் தண்டனை நிறுத்தி வைத்து அவர்கள் சாகும் வரை தண்டனை நிறைவேற்ற ஒத்துழைக்க மாட்டார்கள் .


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை