மேலும் செய்திகள்
எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நாளை தினமலர் பவள விழா
48 minutes ago
இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவளிக்க இ.கம்யூ., நிபந்தனை!
2 hour(s) ago
வேளாண் துறை செயலாளர் திடீர் இடமாற்றம்
2 hour(s) ago
சென்னை:அ.தி.மு.க., கொடி, சின்னம் பயன்படுத்தக்கூடாது என, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு உத்தரவிட கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 18ல் தீர்ப்பு அளிக்கிறது.அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள், அ.தி.மு.க., கொடி, சின்னம், பெயரை பயன்படுத்தக் கூடாது, விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதிக்கவும் கோரியிருந்தார்.நீதிபதி சதீஷ்குமார், கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வு தள்ளுபடி செய்தது.பிரதான மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த்பாண்டியன், அப்துல் சலீம்; பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடினர். தீர்ப்பை மார்ச் 18ல், நீதிபதி வழங்குகிறார்.
48 minutes ago
2 hour(s) ago
2 hour(s) ago