வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சம்பளம்.ஒழுங்கா வருதுல்லா.. சந்தோஷப் படுங்க.
ஏற்கனவே ஜாதி அடிப்படையில் பாதை உயர்வு... இதில் திராவிட லீலை வேறு... நல்லா வெளங்கும்
மதுரை: ''தமிழக நெடுஞ்சாலைத்துறையில் உதவி இயக்குனர் பணிக்கான பதவி உயர்வில் கோர்ட் உத்தரவு கடைபிடிக்கப்படுவதில்லை,'' என, இளநிலை பொறியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.நெடுஞ்சாலைத்துறையில் உதவி பொறியாளர், இளநிலைப்பொறியாளர்கள் 1088 பேர் உள்ளனர். இரு தரப்பினருக்கும் அடுத்த பதவி உயர்வு உதவி இயக்குனர் பணியிடம் தான். இதில் நேரடி நியமனத்தில் வரும் உதவிப்பொறியாளருக்கு 75 சதவீதமும், பதவி உயர்வில் வரும் இளநிலைப்பொறியாளர்களுக்கு 25 சதவீதமும் வழங்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.இளநிலை பொறியாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் இளநிலை வரைவு தொழில்நுட்பவியலாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்களில் பத்தாண்டுகள் பணியாற்றினாலே உதவி இயக்குனர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்று விடுவர். ஆனால் பல ஆண்டுகளாக நுாறு சதவீதமும் உதவிப்பொறியாளருக்கே வழங்குகின்றனர்.இளநிலை பொறியாளருக்கான பதவி உயர்வு தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் 25 சதவீதம் பதவி உயர்வை இளநிலை பொறியாளருக்கு வழங்க 'ரிசர்வ்' செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனாலும் 2018 முதல் அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியியல் மற்றும் ஊரக பணித்துறையினர் சங்கம் இதற்காக பலமுறை அரசை வலியுறுத்தி போராடியும் பலனில்லை.சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'பதவி உயர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை. 2015க்கு பின் இளநிலைப்பொறியாளரின் பணியை வரன்முறை செய்யவும் இல்லை. இருதரப்பினரும் ஒரே பணியை மேற்கொண்டும் பதவி உயர்வு, பணபலன் போன்றவற்றில் பாதிக்கப்படுகிறோம்,' என்றனர்.
சம்பளம்.ஒழுங்கா வருதுல்லா.. சந்தோஷப் படுங்க.
ஏற்கனவே ஜாதி அடிப்படையில் பாதை உயர்வு... இதில் திராவிட லீலை வேறு... நல்லா வெளங்கும்