உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வியாபாரியிடம் நகை கொள்ளை : மர்மநபர்களுக்கு வலைவீச்சு

வியாபாரியிடம் நகை கொள்ளை : மர்மநபர்களுக்கு வலைவீச்சு

விழுப்புரம் : விழுப்புரத்தில் நகைவியாபாரியை தாக்கி அவரிடமிருந்து நகையை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் புதுதெருவை சேர்நதவர் நகைவியாபாரி முருகன். இவர் தனது நண்பர் சுந்தர் என்பவருடன் சென்னைக்கு சென்று நகைகளை வாங்கி வருவது வழக்கம். நேற்றும் நண்பருடன் சென்னை சென்று விட்டு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மூன்ற பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று முருகனை தாக்கி அவர் வைத்திருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள 50 கிராம் தங்கம் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து விழுப்புரம் டி.எஸ்.பி சேகர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை