உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கங்குவா பற்றி நெகடிவ் கமென்ட் : திட்டமிட்ட சதி என ஜோதிகா ஆவேசம்

கங்குவா பற்றி நெகடிவ் கமென்ட் : திட்டமிட்ட சதி என ஜோதிகா ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நடிகர் சூர்யா நடித்துள்ள, கங்குவா படம் குறித்து, சில கும்பல் திட்டமிட்டு தவறான கருத்துக்களை பரப்பியது வருத்தம் அளிக்கிறது' என, நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:நான் நடிகர் சூர்யாவின் மனைவியாக அல்ல; ஒரு சினிமா ரசிகையாக இதை எழுதியுள்ளேன். கங்குவா படம், சினிமாவில் ஒரு அதிசயம். ஒரு நடிகனாக, சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முயலும் சூர்யாவை நினைத்தால், மிகவும் பெருமையாக உள்ளது. கங்குவா படத்தில், நிச்சயமாக முதல் 30 நிமிடம், 'ஒர்க் அவுட்' ஆகவில்லை; சத்தமும் அதிகமாக இருந்தது. ஒவ்வொரு படத்திலும் குறைகள் என்பது ஒரு அங்கமாக இருக்கும். கங்குவா போன்ற பரிசோதனை முயற்சியில் எடுக்கப்படும் படங்களில், அது இருப்பது நியாயமானது. அதுவும் மூன்று மணி நேரத்தில், வெறும் அரை மணி நேரம் மட்டுமே குறைகள் இருப்பதாக தோன்றுகிறது. மற்றபடி, உண்மையாகவே, அது தரமான சினிமா அனுபவத்தை கொடுத்துள்ளது. தமிழ் சினிமாவில், இது போன்ற ஒரு ஒளிப்பதிவை, இதற்கு முன் பார்த்ததில்லை.ஊடகங்கள் மற்றும் சினிமா சார்ந்தவர்களிடம் இருந்து, இந்த அளவுக்கு, 'நெகடிவ்' விமர்சனங்கள் வருவதை பார்த்து, நான் மிகவும் ஆச்சர்யம் அடைந்தேன். பழைய கதையுடன் பெண்களை இழிவாக காட்டி, இரட்டை அர்த்த வசனங்கள் பேசி, அதிக சண்டை காட்சிகளுடன், இதற்கு முன் வந்த பெரிய படங்களுக்கு எல்லாம், இதுபோன்ற ஒரு நிலை இருக்கவில்லை. கங்குவா படத்தில் உள்ள, 'பாசிடிவ்' என்னாச்சு. இரண்டாம் பாதியில் உள்ள பெண்களின் சண்டை காட்சி, சிறுவனுக்கு கங்குவா மீதுள்ள அன்பும், பகையும் குறித்து ஏன் சொல்லவில்லை. நல்ல நல்ல காட்சிகளை விமர்சனத்தில் கூற மறந்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன். வியத்தகு காட்சிகளுடன், கங்குவா படத்தை, '3டி' தொழில்நுட்பத்துடன் கொடுத்துள்ளவர்களுக்கு, கைதட்டலும், பாராட்டும் கிடைக்க வேண்டிய நிலையில், படம் ரிலீசாகி முதல் காட்சி முடியும் முன்னரே, சில கும்பல்களால் இந்த அளவு எதிர்மறை கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளது, மிகவும் வருத்தம் அளிக்கிறது. கங்குவா படக்குழுவினரே, நீங்கள் பெருமையாக இருங்கள். 'நெகடிவ் கமென்ட்' அடிப்பவர்கள் அடித்துக் கொண்டே இருக்கட்டும். அவர்களால் அதுதான் செய்ய முடியும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

M Ramachandran
நவ 24, 2024 13:19

இருவரும் கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடினீங்க. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். இப்போர் அறுவடை பண்ணுங்கோ


J.V. Iyer
நவ 20, 2024 05:01

நீங்க ஹிந்துக்களை கண்டமாதிரி பேசி பேயாட்டம் ஆடலாம், காசு கொடுத்து பார்த்த ஒரு சினிமா ரசிகன் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினால், "அம்மனோ சாமியோ" என்று ஆடுகிறீர்களா? ரசிகர்களின் காதுகளில் ரத்தம் வருகிறதே? நிறையபேருக்கு இந்த கங்குவா சினிமாவை பார்த்ததால் மனநோய் வேறு. அட போங்க பாட்டி


yts
நவ 18, 2024 14:24

நீ 300 கோடி ரூபாய் செலவு செய்து இந்த படத்தை எடுப்பதற்கு பதிலாக அன்று சொன்னது போல பள்ளிகளும் கல்லூரியிலும் கட்டி இருக்கலாம் உனக்கு மட்டும் வருமானம் வேணும்னா என்ன வேணா நீ செய்வ


vijai
நவ 18, 2024 13:31

தமிழ்நாட்ட விட்டு ஓடிட்டு என்ன பேச்சு கிடைக்க ஓடு ஓடு திரும்பி பார்க்காத ஓடு


kumar
நவ 18, 2024 13:27

தமிழன் சுயமரியாதை. நீங்க மும்பை வீதியில் பிச்சைஎடுங்க


Anand
நவ 18, 2024 13:18

நீ செய்தது திருப்பி உனக்கு வருகிறது.... இதுதான் கர்மா..


Gurumurthy Kalyanaraman
நவ 18, 2024 12:51

ஒரு மெஜுரிட்டி மதத்தை பின்பற்றுவோரை பற்றி மட்டமான கருத்துகளை சொன்ன உங்கள் இருவரின் படங்களை எவருமே பார்க்காமல் இருப்பது தான் தமிழரகளின் சுய மரியாதை. நீங்கள் மக்களின் மனம் நோகும் இந்த கருத்துக்களை கூறி இருக்க வேண்டாம். என்ன செய்வது உங்கள் கெட்ட நேரம்.


ஆரூர் ரங்
நவ 18, 2024 11:07

படத்தின் சவுண்டு தோல்விக்குக் காரணமல்ல. தவறான வகையில் அவ்வப்போது நீங்க ரெண்டு பேரும் கொடுக்கும் அநாவசிய சவுண்டுதான். அப்பப்பா. குப்பைப் படத்தைப் பற்றி பயங்கர பில்டப் கொடுத்து பல்பு வாங்கிட்டீங்களே.


Muthuvel
நவ 18, 2024 10:56

மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ராஜராஜசோழன் கட்டிய கோவிலை எளிதில் குறைசொல்லிவிட்டு கடந்துவிடலாம் என்று பகற்கனவு கொண்டு பேசிவிட்டால் ஜோதிகா.. மகா மன்னர்களையும், தலைவர்களையும் கடந்து நிமிர்ந்து நிக்கிறான் எம்பெருமான் பெருவுடையான்....நீ எம்மாத்திரம் அவனிடம் ???


Krishna Moorthy
நவ 18, 2024 09:57

இப்பொழுது தெரிகிறதா மனவலி எப்படி இருக்கும் என்று. நாவடக்கம் வேண்டும் ஜோ. கருத்து கந்தசாமி போல, மூக்கை நுழைக்க கூடாது


சமீபத்திய செய்தி