உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கடலம்மா மாநாடு: சீமான்

 கடலம்மா மாநாடு: சீமான்

சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில், சுற்றுச் சூழல் சார்ந்த பிரச்னைகளை முன்னெடுத்து, தொடர்ச்சியாக மாநாடு நடத்தப்படுகிறது. குறிப்பாக, ஆடு, மாடு மாநாடு, மலைகள் பாதுகாப்பு மாநாடு, மரங்களை காப்போம் மாநாடு என, தொடர்ச்சியாக மாநாடுகள் நடத்தப்பட்டன. அதேபோல், தண்ணீர் மாநாடு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கடலம்மா மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது. நா.த.க.,வின் மீனவர் பாசறை நடத்தும், 'கடலம்மா' மாநாடு, திருநெல்வேலி மாவட்டம், கூத்தன்குழி பகுதியில் நவ.21ம் தேதி நடக்க உள்ளது. இந்த மாநாட்டில், மீனவர் பிரச்னை, கடல் வளம் பாதுகாப்பு குறித்து பேசப்படும் என, நா.த.க., வினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை