கலை செம்மல் விருது: 6 பேருக்கு அறிவிப்பு
சென்னை:தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில், தமிழகத்தை சேர்ந்த மரபு வழி கலை, நவீன பாணி கலை, நுண்கலை துறையில் சாதனை செய்துள்ள கலைஞர்களை பாராட்டி, 'கலை செம்மல் விருது' வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆறு கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருதுடன், 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, 2024 - 25ம் ஆண்டு கலை செம்மல் விருதாளர்களை, கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் காந்தி தலைமையிலான குழுவினர் தேர்வு செய்துள்ளனர். மரபு வழி ஓவியப் பிரிவில் ஓவியர் மணிவேலு, மரபு வழி சிற்பப் பிரிவில் பாலசந்தர், கன்னியப்பன்; நவீன பாணி ஓவியப் பிரிவில் முரளிதரன், செல்வராஜ்; நவீன பாணி சிற்பப் பிரிவில் ராகவன் ஆகியோர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.