உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய பலி: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

கள்ளச்சாராய பலி: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுறை முறையிட்டார்.அவர், பலி தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைகோரி முறையீடு செய்ய உள்ளதாகவும், அதனை அவசர வழக்காக விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறினார்.அரசு தரப்பில், மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டு உள்ளார். எஸ்.பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது என விளக்கம் அளித்தது.இதனையடுத்து இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தஞ்சை மன்னர்
ஜூன் 20, 2024 18:00

விக்கிரவாண்டி தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கும் சி பி ஐ விசாரணை வேண்டும்


Velan
ஜூன் 20, 2024 17:10

எனத்த விசாரண மரக்காணம் விசாரண எண்ணா ட்சு ஓட்டுக்கு காசு வாங்கும் மக்கள் . இப்ப 10 லட்சம் மறுபடியும் இவனுகதான். நீதிமன்றம் தலையிட்டு தடுத்தால் ஓழிய விடிவு இல்ல


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை