உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளக்குறிச்சி செய்தி பேக்கேஜ்

கள்ளக்குறிச்சி செய்தி பேக்கேஜ்

‘சமரசமாக செல்ல அழுத்தம் தந்தவர்கள் மீதும் நடவடிக்கை’ தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பொய்யை மறைக்க, ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க., – எம்.எல்.ஏ., ஒழுங்கீனத்தை மறைத்து, அவரை பாதுகாக்க, பொய் மேல் பொய்களை கூறினர். அமைச்சர்கள் முதல் கூட்டணி கட்சி தலைவர்கள் வரை வரிந்து கட்டி, அருள் விக்னேஷுக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் வேலையில் இறங்கினர். பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரமும் செய்தனர். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்ட, அந்த இரும்பு பெண்மணி தைரியமாக புகார் அளித்தார். உயர் நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால், வேறு வழியின்றி, இப்போது எம்.எல்.ஏ., கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த, 119 நாட்களாக, இதில் நடவடிக்கை எடுக்காமல் சமரசமாக செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டபடி நியாமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓய மாட்டோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார். அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியின் அறிக்கை: த.வெ.க., – எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் கைது, அ.தி.மு.க.,வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. முதல்வர் விஜய் ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் கைது செய்யவில்லை. நாங்கள் கைது செய்ய வைத்துள்ளோம். இந்த வழக்கில், ‘அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று வதந்தி பரப்பி, பொய் சொன்னவர், அவரை பொய் சொல்ல வைத்தவர் என, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம். இந்த குற்றத்தை மறைப்பதற்காக, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு, நீதி பெற்று தருவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பா.ஜ., மகளிர் அணி போராட்டம் கள்ளக்குறிச்சி த.வெ.க., – எம்.எல்.ஏ., அருள் விக்னேஷை கைது செய்ய வலியுறுத்தி, தமிழக பா.ஜ., மகளிர் அணி சார்பில், நேற்று தமிழகம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை