உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வினாடி - வினாவில் ஜெயித்தோருக்கு காமாட்சி மருத்துவமனை கவுரவிப்பு

வினாடி - வினாவில் ஜெயித்தோருக்கு காமாட்சி மருத்துவமனை கவுரவிப்பு

சென்னை: உலக இதய தினத்தை முன்னிட்டு, டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை சார்பில், இதய நலம் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாணவ - மாணவியருக்கு, வினாடி - வினா போட்டிகள் நடந்தன. இதில், சிவனாந்த ராஜாராம் சீனியர் பள்ளி மாணவி நிரிக்னா பீதா, பி.எஸ்.பி.பி., கே.கே.நகர் பள்ளியை சேர்ந்த நவெல்லன் எம்.சிவகுமாரன், வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி மாணவர் ஸ்ரீநந்த் சுரேஷ்குமார் வாரியர் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு, மருத்துவமனையின் இயக்குநர் டி.ஜி.சிவரஞ்சனி, இதய நிபுணர் செந்தில்ராஜ் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்கள், ரொக்க பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். இதுகுறித்து, மருத்துவமனை இயக்குநர் டி.ஜி.சிவரஞ்சனி கூறுகையில், ''சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது எங்கள் நோக்கம். சமூகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதும், அவசர நிலைகள் ஏற்படாத வகையில், தடுக்க முயல்வதையும் எங்கள் கடமையாக கருதுகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை