உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தை காக்கும் அரண்: முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து

தமிழகத்தை காக்கும் அரண்: முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தன் முன்னோர்களைப் போலவே தமிழகத்தை காக்கும் காவல் அரணாக முதல்வர் ஸ்டாலின் உருவெடுத்து உள்ளார்,'' என ம.நீ.ம., தலைவர் கமல் கூறியுள்ளார்.தேர்தல் வாக்குறுதியின்படி வரும் ஜூலை மாதம் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில் கமலுக்கு வாய்ப்பு அளிக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது. இதற்காக கமல் தயாராகி வருகிறார். அவரை தி.மு.க., முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர்.இந்நிலையில், நாளை பிறந்த நாள் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கமல் வாழ்த்து தெரிவித்தார். இதன் பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாளை பிறந்த நாள் காணும் தமிழக முதல்வர், தி.மு.க., தலைவர், என்னுடைய அருமை நண்பர் ஸ்டாலின் நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினேன். தமிழக மக்களும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளாகும் காலத்தில் தன் முன்னோர்களைப் போலவே தமிழகத்தைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் ஸ்டாலின், மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு!. இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 119 )

Keshavan.J
மார் 27, 2025 13:10

வயிறு என்று ஒன்று இருந்தால் பசிக்கும் இல்லையா. அவர் என்ன பண்ணுவார். ஒரு டிவி வேஸ்ட் பண்ணிட்டார்,


பச்சை தமிழன்
மார் 24, 2025 18:43

இந்த உளறல் நாயகனுக்கு இந்த அசிங்கம் தேவையா...ஒரே ஒரு சீட்டுக்காக எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி, தன்னை தானே ஏமாற்றி கொண்டு...இப்படி ஒரு கேவலமான வாழ்க்கை தேவையா கமல்...உங்கள் மேல் இருந்த கொஞ்சம் மரியாதையும் போயிருச்சு...ஆனா....திரையில் மட்டுமல்ல...தரையிலும் நல்ல நடிகன் யா நீ.....


S.V.Srinivasan
மார் 11, 2025 12:53

ராஜ்ய சபா சீட்டுக்காக ஓவர்-a குலைக்குது. அங்க போய் என்னென்ன உலரப்போவுதோ. ஆண்டவா.


Ramesh.M
மார் 07, 2025 18:18

ஒரு மனுஷன் ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு வேண்டி இந்த அளவுக்குமா தரம் தாழ்வான்? உலக்கை நாயகா.... இந்த பொழைப்பு பொழைக்கிறதுக்கு நீ????


VSMani
மார் 07, 2025 17:20

பண்டைக் காலங்களில் புலவர்கள் மன்னர்களை அவர்கள் அரண்மனை தேடிசென்று மன்னர்களின் மனம் குளிரும்படி கவி பாடி பரிசுகள் பல பெற்று செல்வார்கள். இப்போது CM வீடுதேடிச் சென்று CM மனம் குளிரும்படி பேசி MP பதவிக்கு யாசகம் செய்கிறார்கள். இவ்வளவுதான் வித்தியாசம்.


Sivasankaran Kannan
மார் 07, 2025 13:52

கமல்ஹாசன் என்ற மனிதனின் சுயரூபம் அவரின் நடிப்பு ரசிகர்களான என்னை போன்றவர்களுக்கு கடும் வருத்தம்.. என்ன செய்ய மனிதனின் திறமை வேறு, குணம் வேறு.. கொடிய நாகம் படம் எடுத்து ஆடும் பொது அதை தூரத்தில் இருந்து ரசிக்கலாம்.. அனால் அருகில் சென்றால் அதன் குணம் நமக்கு தெரியும்..


Sampath
மார் 07, 2025 12:09

இந்த ஆள் பேசுவது எல்லாமே முரண்


Kanns
மார் 07, 2025 09:55

One Mental Praising Other Mentals Living in Fools Paradise


VSMani
மார் 06, 2025 11:52

பண்டை காலம் களில் புலவர்கள் மன்னர்களை அவர்கள் அரண்மனை தேடிசென்று மன்னர்களின் மனம் குளிரும்படி கவி பாடி பரிசில்கள் பெற்று செல்வார்கள். இப்போது MP பதவி பெற்று செல்வார்கள். இவ்வளவுதான் வித்தியாசம்.


Sekar Chidambaram
மார் 06, 2025 08:45

யாருக்கும் வெட்கமில்லை..


முக்கிய வீடியோ