உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ம.நீ.ம., கட்சி தலைவராக கமல் மீண்டும் தேர்வு

ம.நீ.ம., கட்சி தலைவராக கமல் மீண்டும் தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவராக நடிகர் கமல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.நடிகர் கமல் ஹாசன், 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கினார். முதல் மாநாட்டை மதுரையில் நடத்தி கட்சியின் பெயரை அறிவித்தார். 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு 16 லட்சத்திற்கும் அதிகமாக( 3.7%) ஓட்டுகளை பெற்றது. பிறகு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி களமிறங்கவில்லை.2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் தனித்தே அக்கட்சி களமிறங்கியது. இருப்பினும் ஒரு தொகுதிகளில் கூட அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. நடிகர் கமலும் கோவை தெற்கு தொகுதியில் போராடி பா.ஜ.,வின் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். இதன் பிறகு அக்கட்சியில் சில முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக விலகி தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் அடைக்கலமாகினர்.இருப்பினும் கமல் தொடர்ந்து கட்சியை நடத்தி வருகிறார். 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை. மாறாக தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல் பிரசாரம் செய்தது. கமலின் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என தி.மு.க., உறுதி அளித்து உள்ளது.இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்த கூட்டத்தில், கட்சியின் தலைவராக கமல் மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

sugumar s
செப் 25, 2024 17:41

after kamal changed his mind from dmk opposition to dmk support for rajya sabha seat, will he still get good amount of vote in next election?? in next election he will get shock about his vote share


sundarsvpr
செப் 22, 2024 11:57

பாவம் . ஜோசப் விஜய் ஆரம்பித்த கட்சியில் தலைவர்கள் மாறலாம். இதனால் கட்சியில் நிலையான தலைவர் துணை தலைவர் என்ற கொள்கை கோட்பாடு இருக்காது. விஜய் ஜோசப் முடிவு கமல் போல் இருக்காது.


நயன்
செப் 22, 2024 08:40

இவன் ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு கட்சியை அடமான வைத்தவன்!!!


அஜய் சென்னை இந்தியன்
செப் 22, 2024 00:15

இந்த கட்சி இன்னும் உயிரோடு இருக்கா? நான் மொத்தமா திமுக விடம் விலை பேசி வித்துடாரு என்று ரொம்ப நாள்ள எண்ணி இருந்தேன்.


panneer selvam
செப் 21, 2024 23:58

Kamal ji , Is it part of Big Boss show ?


கிஜன்
செப் 21, 2024 21:48

உதயநிதி போட்டியிடவில்லையா ?


சமூக நல விரும்பி
செப் 21, 2024 21:13

கமல் கட்சிக்கு நிச்சயம் ஒரு ஓட்டு விழும். அது கமல் ஓட்டு. திமுகவில் விரைவில் சூறாவளி வீசும். அது மையம் கொள்ளும்போது எந்த கட்சியும் இருக்காது.


M Ramachandran
செப் 21, 2024 19:52

கமாலு கட்சியை ஸ் டாலினிடம் பெறம் பேச்சி அடகு வச்சாச்சி. அது வயிற்றுக்குள் போயி கட மூடா ஆகி ஒரு நாள் காலையில் வெளியேறிவிடும்.


Balamurugan
செப் 21, 2024 19:04

இனிமேல் நீ வயசுக்கு வந்தா என்ன இல்ல வராட்டினா என்ன? நீ ஒரு செத்த பாம்பு. திமுகவுடன் கூட்டணி போட்டவுடனேயே நீ உன்னுடைய தனித்துவத்தை இழந்து விட்டாய். நீயும் உன்னுடைய சுயநலத்துக்காக எவன் காலையும் நக்குவாய் என்பதை உணர்த்திவிட்டாய்.


தேவதாஸ் புனே
செப் 21, 2024 19:03

இந்த பதவியை வாங்க ஒரு பத்துப் பேரை புடிச்சிக்கிட்டு வந்து டீ, காபி, டிபன், சாப்பாடு, மண்டப செலவு இவ்வளவு செய்யனுமா.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை