உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கமலா ஹாரிஸ் வெற்றி பெறணும்; பூர்வீக கிராமம் துளசேந்திரபுரத்தில் சிறப்பு பிரார்த்தனை!

கமலா ஹாரிஸ் வெற்றி பெறணும்; பூர்வீக கிராமம் துளசேந்திரபுரத்தில் சிறப்பு பிரார்த்தனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவாரூர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, அவரது பூர்வீக ஊரான மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளரான தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xggp36hw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸின் பூர்விகம், திருவாருர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமம். இவரது தாய் வழித்தாத்தா பி.வி.கோபாலன். சிவில் சர்வீஸ் அதிகாரி. இவரின் இரண்டாவது மகளான சியாமளா உயர்கல்விக்காக 1960களில் அமெரிக்கா வந்தார். அங்கு, ஜமைக்காவைச் சேர்ந்த டொனால்ட் ஹாரிசை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1964 ல் மகளாக பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ்.கமலா ஹாரிஸ் வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டே அரசியலில் ஈடுபட்டார். தொடர்ந்து கலிபோர்னியாவின் முதல் பெண் எம்.பி., ஆகவும் தேர்வானார். 2019 ல் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களமிறங்கிய போது துணை அதிபராக கமலா போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராம மக்கள் விரும்புகின்றனர்.இதற்காக, கமலா ஹாரிஸ் குல தெய்வமான தர்மசாஸ்தா கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதற்காக, அமெரிக்காவில் இருந்து கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் மூன்று பேர் சிறப்பு பிரார்தனையில் பங்கேற்றனர். மேலும், அவர் வெற்றி பெற வேண்டி, கோயில் வளாகத்தில் பேனர் ஒன்றையும் கிராம மக்கள் வைத்து உள்ளனர்.இந்த கோயிலுக்கு நன்கொடை கொடுத்ததாக கல்வெட்டில் கமலா ஹாரிசின் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

karthik
நவ 07, 2024 13:33

கடவுள் காப்பாற்றிவிட்டார்.


sankar
நவ 07, 2024 09:53

அதர்மவாதிகளுக்கு உதவி செய்ய யாருக்கு மனது வரும்


Thiyagarajan S
நவ 06, 2024 20:01

இவர்கள் பைத்தியக்காரர்கள்.... தேர்தலுக்கு முன்பு வரை கமலா ஹாரிஷ் தன்னை இந்திய வம்சாவளியினர் என்று அடையாளப்படுத்திக் கொண்டதே இல்லை... மாட்டுக்கறி தின்பது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவது போன்ற அடையாளங்கள் தான் கமலா ஹாரிஸ் ..


சாண்டில்யன்
நவ 06, 2024 13:34

ஊரையும் உறவுகளையும் விட்டு வெளிநாடு போய்விட்டவர்


Siva
நவ 06, 2024 06:29

அமெரிக்கன் பெண் ப்ரெசிடெண்டை விரும்பமாட்டார்கள் . அவர்கள் முன்னேற கொஞ்சம் நாள் ஆகும்


Mani . V
நவ 06, 2024 05:50

நாங்கள் தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் ஜாதி, இன, மத மறுப்பு திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்போம். வெளிநாட்டில் எந்த இனத்தை, மதத்தை, ஜாதியை சேர்ந்தவரை திருமணம் செய்து இருந்தாலும், "எங்கள் பிள்ளை" என்று கொண்டாடி மகிழ்வோம்.


Smba
நவ 06, 2024 05:28

அப்பன் வெளிநாடு பிறகு எப்படி இந்தம் மா தமிழகம் ஆகும் புரில ஜால்ரா அடிக்க ராணுக மீடிய உட்பட


ramani
நவ 06, 2024 05:26

பாரத தேசத்திற்கு கமலா ஹாரிஸ் வெற்றி நன்மை தருமா யோசிக்க மாட்டார்களா அறிவில்லாத ஜனங்கள்


J.V. Iyer
நவ 06, 2024 05:00

கமலாவைப்பற்றி biopic தமிழில் எடுத்தால், கமலா தன் தாயாரை "ஆச்சி" அல்லது "அப்புச்சி" என்றுதான் கூப்பிடுவார். அவர் அம்மாவும், அவரும் கழுத்தில் எப்போதும் சிலுவையைத்தான் அணிந்திருப்பார் என்பது சிறப்பு. கமலா வெற்றிபெற்றால், கோஹ்லி செஞ்சுரி, ஆனால் இந்தியா தோற்பது மாதிரி. இப்போதெல்லாம் கோஹ்லி எங்கே இருவதைத் தாண்டுகிறார் என்று சொல்வது காதில் விழுகிறது. ஆனாலும் இந்தியா தோற்பது நிற்கவில்லை. "காமலா" என்று ட்ரம்ப் சொல்வதே அழகு.


Rajasekar Jayaraman
நவ 06, 2024 02:58

பலபட்டரை இவள் தோற்க்க வேண்டும்.


சாண்டில்யன்
நவ 06, 2024 16:45

ஆச்சு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை