மூடும் நிலையில் காமராஜர் பல்கலை
தமிழக அரசு, 300 கோடி ரூபாய்க்கு மேல், ஈட்டு நிதியை நிலுவை வைத்துள்ளதால், மதுரை காமராஜர் பல்கலை, கடும் பொருளாதார நெருக்கடியால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பணியாளர்கள் நியமன முறைகேடு காரணம் என்றால், அதை தடுக்கத் தவறியது ஏன்? கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் இயங்கும் பல்கலையை முடக்குவது கண்டனத்துக்குரியது. நான்கு சிண்டிகேட் உறுப்பினர் பதவிகள், 15 ஆண்டுகளாக காலியாக உள்ளன. உதவி பேராசிரியர் பணியிடங்களில், தற்காலிக பணியாளர்களை நிரப்பி, வகுப்புகள் நடத்துகின்றனர். அவர்களுக்கும் முறையாக ஊதியம் வழங்காததால், போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். கவர்னர் உடனான, தி.மு.க., அரசின் மோதலால், 10க்கும் மேற்பட்ட பல்கலைகளில் துணை வேந்தர்கள் இல்லை. பல்கலைகளை மோசமான நிலையில் வைத்துவிட்டு, 'கல்வியில் சிறந்த தமிழகம்' என வீண் தற்பெருமை பேசுவது வெட்கக்கேடு. - சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்