ஜாமின் கேட்டு கனிமொழி மனு தாக்கல்
புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி., கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் ஜாமின் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக கடந்த மே மாதம் இவர்களின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.