உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அமைச்சர் நிர்மலாவுடன் கனிமொழி, தங்கம் தென்னரசு சந்திப்பு; நிதி விடுவிக்க வலியுறுத்தல்

மத்திய அமைச்சர் நிர்மலாவுடன் கனிமொழி, தங்கம் தென்னரசு சந்திப்பு; நிதி விடுவிக்க வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி., கனிமொழி ஆகியோர் டில்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். தமிழகத்துக்கான நிதியை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.இது தொடர்பாக,தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rkx6n545&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக முதல்வர் ஸ்டாலின் , 2025-26 ஆம் ஆண்டு நிதியாண்டில், நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4,500 கோடிக்கான நிதியையும், மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ. 350 கோடி நிதியையும் விரைந்து வழங்கிட ஒப்புதல் அளிக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தை இன்று நிதியமைச்சரிடம் வழங்கினோம். தமிழக அரசு சார்பில் பார்லி குழுத் தலைவர் கனிமொழியுடன் இணைந்து, இன்று டில்லியில் கடிதத்தை வழங்கி, விரைவில் நிதி வழங்கிட ஏற்பாடு செய்யும்படி வேண்டுகோள் விடுத்தோம்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:குளச்சல் துறைமுக விரிவாக்கப் பணிகளைத் தொடங்கிட வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் என்னைச் சந்தித்து, தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் இந்த நியாயமான கோரிக்கையை மத்திய நிதியமைச்சர் ஏற்றுக்கொண்டு, விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

சாமானியன்
ஆக 19, 2025 22:53

மற்ற மாநில நிதியமைச்சர்கள் நிர்மலாஜியைப் பார்த்து இவ்வாறு கடிதம் கொடுத்ததாக செய்தி வரலயே ! மோடி நிதிப்பகிர்வை ஏ.ஐ. வாயிலாக சரியான நேரத்தில் விடுவிப்பதாக ஒரு செய்தி கூட வந்தது. ஈ.டீ ரெய்டுக்கும் இந்த சந்திப்புக்கும் லிங்க் உண்டா ?


Ramesh Sargam
ஆக 19, 2025 20:29

நிதி கேட்கும்போது மிக மிக பவ்யமாக நடந்துகொள்வார்கள். நிதி கிடைத்தபின்பு நிதி மிகவும் குறைவு, தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டார் நிர்மலா என்று அவரை திட்டுவார்கள் இவர்கள்.


xyzabc
ஆக 20, 2025 00:58

கிடைக்கும் நிதி எங்கே போனது? கேள்வி கேட்க கூடாது. ஆனால் நிதி கேட்டு கொண்டே இருப்போம். மகளிர் உரிமை தொகைக்கு பணம் வேனும். பா ஜ க வை தொடர்ந்து வஞ்சிப்போம்.


Priyan Vadanad
ஆக 19, 2025 20:19

எனக்கு ஏதோ தீயமுககாரங்க டெல்லிக்கு போயி எதுக்கும் ஒரு துண்டு போட்டு வைக்கலாம்னு வரியம்மாவை சந்தித்திருக்கலாம்னு தோணுது.


ஈசன்
ஆக 19, 2025 20:18

தமிழக பாஜகவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் அண்ணாமலை அவர்கள். அவர் தலைமை பதவி பறிபோக இந்த நிதி அமைச்சரும் ஒரு காரணம். ஒரு மனிதர் தன் குடும்பத்திற்கு முக்கியத்துவம் தராமல் அரும்பாடுபட்டு பாஜகவை வளர்த்து 15 சதவீத ஓட்டு வங்கியை கொண்டு வந்தால், இந்த நிதி அமைச்சரும், நம் ஊர் ஆடிட்டர் ஒருவரும் சேர்ந்து, அண்ணாமலையை தூக்கி தமிழக பாஜகவை சாகடித்து விட்டார்கள். தற்போது, எதிரி கட்சி உறுப்பினர்களுடன் இந்த அம்மாவும், உள்துறை அமைச்சரும் கை கோர்த்து வலம் வருகிறார்கள். பாவம் மோடிக்கு தவறான தகவல்களை தந்து அதிமுக கூட்டணி என்ற அஸ்திரத்தை பயன்படுத்தி விட்டார்கள். தமிழகத்திற்கு விடிவு காலமே வராது போல..


Sridhar
ஆக 19, 2025 19:42

இவனுகதான் பொழப்புக்கு வேண்டி அங்க போய் நாடகமாடுறாங்கன்னா அந்த அம்மாவுக்கு என்ன வந்திச்சி? போ, போ னு வெரட்டி அடிக்காம, இதுவரை என்ன செலவழிச்சீங்க, ஏன் இவ்வளவு கடன், மாநிலத்துல எங்கேயுமே ஒரு முன்னேற்றத்தையும் காணோமே, கடன் வாங்கின பணமெல்லாம் எங்க போச்சி, வெறும் செலவு கணக்க காமிச்சு பொருளாதார வளர்ச்சினு கம்பி கதையெல்லாம் கட்டிவுட்டுட்டு இருக்கீங்களே னு நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்கவேண்டாமா?


Rajan A
ஆக 19, 2025 19:10

எல்லாம் தேர்தல் கழிச்சு கொடுத்தால் போதும். இன்னும் 6 மாதத்தில் ஒன்னும் முழுசாக பண்ண முடியாது. 10-20% வோட்டு வாங்க போகும்


subramanian
ஆக 19, 2025 19:03

கனிமொழி இது போன்ற நாடகம் ஆடக்கூடாது.


தாமரை மலர்கிறது
ஆக 19, 2025 18:43

தமிழகத்திற்கு பத்து பைசா கொடுக்க தேவை இல்லை. ஒழுங்கா சைலண்டா ஓடிபோயுடு மவனே. ரொம்ப அடம்பிடிச்சா, நிதி வராது. அமலாக்கத்துறை ரைடுதான் வரும்.


Gokul Krishnan
ஆக 19, 2025 20:11

தமிழ் முறை இருந்து பத்து பைசா கூட வரி வேண்டாம் என்று சொல்லி விட்டு வாங்கின் வரியை திரும்ப கொடுத்து விட்டு இந்த கருத்து பதிவிடவும் இப்படி கருத்து பதிவிடுவதால் நான் தி மு க ஆதரவு என்று நினைக்க வேண்டாம் வருமான வரி சொத்து வரி ஜி எஸ் டி என்று நடுத்தர மக்களில் பாதிக்கப்பட்ட ஒருவன்


vivek
ஆக 20, 2025 10:32

உனக்கு எவ்வளவு வருமான வரி...எவ்வளவு GST கட்டினாய் ...விளக்கமாக சொல்லவும் கோகுல


Gokul Krishnan
ஆக 20, 2025 20:54

நான் வரி கட்டினேன் அல்லது இல்லையா என்பதை உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை வேண்டும் என்றால் உங்க வரி அமைச்சரிடம் போய் கேள்வி கேளு. பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் வரும் பிசிசிஐ யாரும் கேள்வி கேட்க கூடாது என்று அவசர அவசரமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்தது யார் அதை எல்லாம் கேள்வி கேட்க மாட்டாய்


ஆரூர் ரங்
ஆக 19, 2025 18:35

பட்டியலின மக்களுக்கான திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாமல் திருப்பியனுப்பிய மாநில அரசு எது?. விடியலரசுதான்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 19, 2025 18:27

ஆட்சி முடியும் தருவாயில் பரம்பரை திருடனை நம்பி பத்து பைசா கூட கொடுக்க முடியாது. இவனுக அரசின் பணத்தை வைத்து என்ன செய்வார்கள் என்று ஆப்பிரிக்க பழங்குடியினருக்கு கூட தெரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை