உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்

மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்

சென்னை : 'பொங்கல் திருநாளின் போது நடக்கவுள்ள, யு.ஜி.சி., நெட் தேர்வை வேறு நாளுக்கு மாற்றம் செய்ய வேண்டும்' என, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் கனிமொழி கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:சமீபத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்ட யு.ஜி.சி., 'நெட்' தேர்வு அட்டவணையின்படி, நெட் தேர்வு ஜனவரி 3ல் துவங்கி, 16ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் அன்றும் தேர்வு நடக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழ் மக்களின் அடையாள திருநாளை கொண்டாட இடையூறாக அமைந்துள்ளது.குறிப்பாக, மக்களின் பண்பாட்டு உரிமையை சிதைக்கும் விதமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. எனவே, ஜனவரி 15, 16ம் தேதிகளில் நடக்க இருப்பதாக அறிவித்த தேர்வுகளை, வேறு தேதிக்கு மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

veeramani
டிச 23, 2024 09:55

சங்கராந்தி திருவிழா.. வடக்கு மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தென் தமிழ்நாட்டில் மட்டும்தான் பொங்கல், மாட்டுப்பொங்கல் என விமரிசையாக கொண்டாடப்படுகிறது. எனவே வடக்கு மாவட்டங்கள் முக்கியதுவம் கொடுப்பதில்லை. எனவே அகில இந்திய தேர்விற்கும் திருவிழாவிற்கு முடுச்சு போடாதீர்கள்


Barakat Ali
டிச 23, 2024 09:36

அம்மையாரே... ஞாயிற்றுக்கிழமையில் மாற்றி வையுங்கள் என்று கோரிக்கை வையுங்கள்.. அதில் தவறில்லை.. எனக்குத் தெரிந்து பொங்கல் வேறு வேறு பெயர்களில் நாடு முழுவதும் - ஏன் சில கிழக்காசிய நாடுகளிலும் - கொண்டாடப்படுகிறது.. தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று மாற்றிய வந்தேறிகளுக்கு, தமிழையும், தமிழனைப் பழித்த கேடுகெட்ட வழி வந்தவர்களுக்கு இதைக் கேட்க உரிமையில்லை ....


நிக்கோல்தாம்சன்
டிச 23, 2024 08:56

தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பு, கார்பொரேட் குடும்பம் இந்துக்களின் பண்டிகையை உணர்ந்துள்ளது


முக்கிய வீடியோ