உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேள்வி கேட்கும் அதிமேதாவிகள்: குமரியில் முதல்வர் காட்டம்

கேள்வி கேட்கும் அதிமேதாவிகள்: குமரியில் முதல்வர் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கன்னியாகுமரி; கன்னியாகுமரியில் ஒரு வள்ளுவர் சிலை அமைத்ததற்கு வெள்ளி விழாவா என்று அதிமேதாவிகள் கேட்கின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். திருக்குறள் கண்காட்சியை தொடங்கி வைத்து வெள்ளி விழா சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; திருக்குறளாகவே வாழ்ந்தவர் கருணாநிதி. அவரின் எண்ணத்துக்கு உயிர் கொடுத்தவர் ஸ்தபதி. வள்ளுவர் சிலை தொடங்கி கருணாநிதியின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். சிலை அமைத்ததற்கு எதற்கு வெள்ளி விழா என்று சில அதிமேதாவிகள் கேட்கின்றனர். 12 கோடி ரூபாய் செலவில் திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்றை பறை சாற்றக்கூடிய வகையில் 3டி காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும். முதல் படகுக்கு காமராஜர் பெயரும், 2வது படகுக்கு மார்சல் நேசமணி பெயரும், 3வது படகுக்கு ஜி.யு. போப் பெயரும் வைக்கப்படும். கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். மாவட்டம் தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். திருக்குறள் தொடர்பான கலை, இலக்கிய அறிவுசார் போட்டிகள் நடத்தப்படும். திருக்குறளும், உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்பட்டிருப்பது போல தனியார் நிறுவனங்களிலும் எழுத ஊக்குவிக்கப்படும். ஆண்டுதோறும் திருக்குறள் மாநாடு நடத்தப்படும். திருக்குறளும், திருவள்ளுவர் சிலையும் நம் வாழ்க்கையை காக்கும் கேடயம். நம்மை அழிக்க நினைக்கும் தீமைகளை தடுக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 107 )

V RAMASWAMY
ஜன 30, 2025 11:28

"திருக்குறளும், உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்பட்டிருப்பது போல தனியார் நிறுவனங்களிலும் எழுத ஊக்குவிக்கப்படும்". எழுதுவதை ஊக்குவிப்பதை விட்டு வள்ளுவர் சொன்னதை செயல்படுதுவதை ஊக்குவியுங்கள், முதலில் எம் எல் ஏக்கள், மந்திரிகள் அனைவரும் செயல்படுத்தி மக்களுக்கு முன்னோடியாக்கிக் காட்டுங்கள்.


Narayanan
ஜன 29, 2025 16:19

திருவள்ளுவரின் முதல் அதிகாரத்தை பின்பற்றுங்கள் பார்ப்போம் . அதை பின்பற்றுவதாக சொல்லுங்கள் பிறகு மற்றவற்றை பேசுவோம்.


Narayanan
ஜன 29, 2025 16:16

இன்று நான்கு வயது பையன்கூட கேள்வி கேட்கிறான் . அதிமேதவிதான் . நம்காலம் போய் விட்டது .


M Ramachandran
ஜன 06, 2025 02:56

கேள்வி கேட்க்காமல் என்ன சொல்வதற்கெல்லாம் ஜிங்க்சா என்றா தாளம் போட வா முடியுமா? அதற்க்கு தான் அப்பாய்ன்டெட் 200 ஊபீஸ் கல் இருக்கிரார்களே


Ramesh Sargam
ஜன 05, 2025 21:56

அது போகட்டும்.... ஒரு நாலு திருக்குறள், மனப்பாடமா, புஸ்தம் பாக்காம, துண்டு சீட்டு உதவி இல்லாம, ப்ராம்ப்டர் உதவி இல்லாம, திக்கல் , திணறல் இல்லாம சொல்லுங்க பார்க்கலாம்.


M Ramachandran
ஜன 06, 2025 09:24

அது தமிழனை அல்லவா கேட்க வேண்டும். திரவிடார்கள் தெலுங்கில் கேளுங்கள். சொல்லுவோம்


kumarkv
ஜன 03, 2025 16:18

நாசாமா போச்சு


sundar
ஜன 01, 2025 16:14

மிஸ்டர் சாரே . நீங்க அப்படியெல்லாம் கோவிக்கக் கூடாது சார்ர் ர் ர் ர் .சார் வள்ளுவர் விவேகானந்தர் இவங்கட்கும் ஜி யு. போப்பு க்கும் என்ன தொடர்பு.? பட்சே நிங்கள் சர்க்காரில் ஏதேனும் ஒன்று உருப்படியாயிட்ட காரியம் ஏதேனும் ஒன்னு உள்ளதென்னு சொன்னால் அஃது சாராய வியாபாரமும் போதை கடத்தலும் எண்டு பாண்டி நாட்டு சேட்டன் மார் பறையுன்னு. சுவற்றில் ஆயிட்ட நிங்க கட்சி போஸ்ட்டர் அதுல நிங்கட சித்திரத்தின் மீது அடி கொடுக்கும் அம்மையத் தேடி , பொலிஸ் விசாரணை நடக்கோ? ஏனிந்த விஅ வஸ்தை சாரே .


Matt P
ஜன 01, 2025 07:38

ஜி யு போப்பய்யா திருக்குறளை இங்கிலீஷில் மொழி பெயர்த்தார் என்றால் நல்லது தான். அந்த மொழி பெயர்ப்பு வெற்றி பெற்று இருந்தால், உலகிலுள்ள பல நூலகங்களிலும் புத்தக கடைகளிலும் இருக்க வேண்டும். எங்கேயும் அது கிடைப்பதாக தெரியவில்லை. அவரது அந்த நூலை ஸ்டாலின்ஏ வெளியிட்டு ஏன் பிரபலப்படுத்த கூடாது?. படகுக்கு பெயர் . போப்பையஆ பெயர் வைப்பதற்கு பதிலா பாப்பையா பெயரை வைக்கலாம் இன்னும் தமிழ் வளர்க்கிறார். சமீபத்தில் இங்குள்ள தமிழ் சங்க விழாவில் அவரை பார்த்தேன்.


Matt P
ஜன 01, 2025 00:45

கேள்வின்னாலே நம்ம தலைவருக்கு ஓவ்வாமை என்றாகி விட்டது ..ஏன் என்ற கேள்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை. இவர் பதில் சொல்ல தேவை இல்லை என்று நினைப்பதால் அதிமேதாவி என்ற நினைப்பு.


Matt P
டிச 31, 2024 23:24

வள்ளுவன் பக்கத்தில் சின்னதா அடியவன் கருணாநிதிக்கு ஒரு சிலை வைக்கலாமே.


புதிய வீடியோ