உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெற்றோரும் இல்லை, வீடும் இல்லை; தவித்த குழந்தைகளுக்கு வீடு கட்டித் தந்த சமூக ஆர்வலர்கள்

பெற்றோரும் இல்லை, வீடும் இல்லை; தவித்த குழந்தைகளுக்கு வீடு கட்டித் தந்த சமூக ஆர்வலர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காரைக்குடி; காரைக்குடி அருகே பெற்றோரை இழந்து, வீட்டையும் இழந்து தவித்த குழந்தைகளுக்கு சமூக ஆர்வலர்கள் வீடு கட்டிக் கொடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு; காரைக்குடி அருகே உள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் சுப்பையா. இவர் உடல்நிலை சரியில்லாமல் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவரது மனைவியும் இவருக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். தாய் தந்தை உயிரிழந்த நிலையில், அத்தையின் அரவணைப்பில் குழந்தைகள் படித்து வந்தனர். இந் நிலையில் அவர்கள் வசித்து வந்த வீடு கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் குழந்தைகள் கொட்டும் மழையில் தங்குவதற்கு கூட வீடின்றி தவித்து வந்தனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனை அறிந்து காரைக்குடியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள், நம்ம கோவிலூர் நண்பர்கள் சேர்ந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர்.அதன்படி அவர்கள் தங்களின் நிதி பங்களிப்போடும், பிறரின் பங்களிப்போடும் தற்போது ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் குயில் கூடு என்று பெயரிட்டு ஒரு வீட்டை கட்டிக் கொடுத்துள்ளனர்.தாய், தந்தையை இழந்து வீட்டையும் இழந்து தவித்த குழந்தைகளுக்கு சமூக ஆர்வலர்கள் தாமாக முன்வந்து குடியிருக்க வீடு கட்டிக் கொடுத்தது ஊர் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Subramanian
மார் 13, 2025 07:32

வாழ்த்துகள்


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 12, 2025 20:58

கள்ளக்குறிச்சிக்கு மூணு கோடி ஊக்கத்தொகை அன்பளிப்பாக வழங்கிய விடியல் டோப்பா அப்பாவுக்கு இந்த குழந்தைகளுக்கு மூணு லட்சம் கொடுக்க மனசில்லை.


Ramesh Sargam
மார் 12, 2025 20:32

எச்சரிக்கை! அந்த வீடுகளை அரசியல்வாதிகள், குறிப்பாக திமுகவினர் ஆட்டை போட்டு விடாமால் காப்பாற்றுங்கள்.


Azar Mufeen
மார் 12, 2025 23:45

தி. மு. கா வோட கள்ள கூட்டணி வச்சிருக்க பாஜகவும் அபகரித்துவிடுவார்கள்


Boomi 1991
மார் 12, 2025 19:54

தமிழர்கள் வாழ்வியலில் தானதர்மம் பிரிக்க முடியாத பழக்கவழக்கங்கள்


अप्पावी
மார் 12, 2025 19:36

இந்தி படிச்சிருந்தா பி.எம் ஆவாஸ் யோஜனாவுல வூடி கிடைச்சிருக்குமே


Iniyan
மார் 12, 2025 18:57

சிறந்த பணி. நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.


babusrinivasan
மார் 12, 2025 16:09

நன்றி அய்யா உங்கள் அளப்பரிய செயலுக்கு வணங்குகிறேன்


Jayaraman Ramaswamy
மார் 12, 2025 15:47

உதவிய, உதவும் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் சிறக்க நாடும் சிறக்கும். குழந்தைகள் என்றும் இவர்களை மறக்க மாட்டார்கள், நாமும் மறக்க மாட்டோம்.


raju
மார் 12, 2025 15:44

அரசாங்கம் .. ஆட்சியாளர் வட்டாட்சியாளர் .. MLA மேப் MP எல்லாம் எண்ணத்திற்கு ? கொள்ளை கூட்டம்


R S BALA
மார் 12, 2025 17:45

இருக்கும் வீட்டை இடிக்க வேண்டுமானால் வழி கூறுவார்கள் இவர்கள்...


raju
மார் 12, 2025 15:41

வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை