உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெயலலிதாவின் ரூ.2,000 கோடி நகை, சொத்து ; விற்றால் தமிழக அரசுக்கு மிக பெரிய லாபம்

ஜெயலலிதாவின் ரூ.2,000 கோடி நகை, சொத்து ; விற்றால் தமிழக அரசுக்கு மிக பெரிய லாபம்

பெங்களூரு; தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை, தமிழக அரசிடம் கர்நாடகா அரசு ஒப்படைத்து உள்ளது.'தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள், நில பத்திரங்களை, தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம், கர்நாடக அரசு ஒப்படைக்க வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1y7f250d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'நகைகளை எடுத்து செல்ல, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அனைத்து ஏற்பாடுகளுடன் பெங்களூரு வந்து, பிப்ரவரி, 14, 15ம் தேதிகளில் எடுத்து செல்ல வேண்டும்' என, கடந்த மாதம், 29ம் தேதி சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.இந்த உத்தரவின்படி, கடந்த 13ம் தேதி இரவே, தமிழக உள்துறை இணை செயலர் ஆனி மேரி சுவர்ணா, லஞ்ச ஒழிப்பு எஸ்.பி., விமலா, கூடுதல் எஸ்.பி., புகழ்வேந்தன் தலைமையில், 30 க்கும் மேற்பட்ட போலீசார், பெங்களூரு வந்தனர்.நேற்று முன்தினம் காலையில், விதான் சவுதாவில் உள்ள கருவூலத்தில் இருந்த ஆறு பெட்டிகளில், நான்கு பெட்டிகளில் இருந்த நகைகள், சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்திற்கு எடுத்து வரப்பட்டன. நீதிபதி மோகன், ஆனி மேரி சுவர்ணா, விமலா, புகழ்வேந்தன், பெங்களூரு மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேகர் மேற்பார்வையில், நகைகளை சரிபார்க்கும் பணி நடந்தது.

நில ஆவணம்

நீதிபதி மோகனிடம் என்னென்ன நகைகள் என்ற பட்டியல் கொடுக்கப்பட்டது. அவர் பட்டியலை வாசிக்க, நகை மதிப்பீட்டாளர் மதிப்பீடு செய்தார். பின், நகைகள் மீண்டும் பெட்டிக்குள் வைக்கப்பட்டன.மாலை, 5:45 மணி வரை, மூன்று பெட்டிகளில் இருந்த நகைகள் மட்டுமே எண்ணப்பட்டன. இந்த மூன்று பெட்டிகள், எண்ணப்படாத பெட்டியில் இருந்த நகைகள் மீண்டும் விதான் சவுதாவுக்கு எடுத்து செல்லப்பட்டன. நேற்று காலை, 10:00 மணிக்கு விதான் சவுதாவில் இருந்து, ஆறு பெட்டிகளும் நீதிமன்றத்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டன. நீதிபதி மோகன் முன்னிலையில், 2வது நாளாக நகைகளை சரிபார்க்கும் பணி நடந்தது.நேற்று முன்தினம் யார், யார் இருந்தனரோ அவர்கள் அப்படியே இருந்தனர். காலை, 10:30 மணிக்கு ஆரம்பித்த நகை சரிபார்க்கும் பணி, மதியம், 1:00 மணிக்கு முடிந்தது.பின், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கொண்டு வந்த, ஆறு இரும்பு பெட்டிகளில் நகைகள் அடுக்கி வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து, ஜெயலலிதா பெயரில் இருந்த 1,000 ஏக்கர் நில ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஆவணங்களை சூட்கேஸ்களில் வைத்தனர். வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தையும், உங்களிடம் ஒப்படைத்து விட்டோம் என்று கூறி, தமிழக அதிகாரிகளிடம், கர்நாடக அதிகாரிகள் எழுதி வாங்கிக் கொண்டனர்.

ஏழு வாகனங்கள்

இந்த நடைமுறைகள் முடிந்த பின், மதியம், 3:30 மணிக்கு நீதிபதி அறையில் இருந்து, இரும்பு பெட்டிகள் வெளியே எடுத்து வரப்பட்டன.மூன்றாவது மாடியில் உள்ள நீதிபதி அறையில் இருந்து, லிப்ட் மூலம் ஆறு பெட்டிகளும் தரைதளத்திற்கு கொண்டு வரப்பட்டன.முன்னதாக தமிழக அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம், கவனமாக செல்லுங்கள் என்று, நீதிபதி மோகன் கூறினார்.தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஏ.எஸ்.டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான வேனில், நகைகள் இருந்த ஆறு பெட்டிகளும் சரியாக மாலை, 3:45 மணிக்கு ஏற்றப்பட்டன.நில ஆவணங்கள் இருந்த சூட்கேஸ்கள், போலீசாரின் உடைமைகள் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டன. கர்நாடக போலீஸ் வேன் முன் செல்ல, அதனை பின்தொடர்ந்து தமிழக உள்துறை இணை செயலர் ஆனி மேரி சுவர்ணா வந்த கார், போலீசார் வந்த வாகனங்கள் சென்றன. நகை ஏற்றி சென்ற வாகனம், எஸ்கார்ட் வாகனம் உட்பட ஏழு வாகனங்கள் புறப்பட்டு சென்றன.நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்ட வாகனங்கள், தமிழக எல்லையான ஓசூரை வந்தடைந்ததும், கர்நாடக போலீசார் திரும்பிச் சென்றனர். அவர்களுக்கு தமிழக போலீசார் நன்றி தெரிவித்தனர். பின், சென்னையை நோக்கி பயணித்தனர்.* தங்க கத்தி, வாள், பேனாமுன்னதாக நீதிமன்றத்தின் முதல் மாடியில் உள்ள பத்திரிகையாளர் சந்திப்பு அரங்கில், அரசு வக்கீல் கிரண் ஜவளி அளித்த பேட்டி:தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், சொத்து ஆவணங்களை எடுத்து செல்ல வரும்படி, கடந்த மாதம், 29 ம் தேதி நீதிபதி மோகன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, தமிழகத்தில் இருந்து தமிழக உள்துறை இணை செயலர் ஆனி மேரி சுவர்ணா, லஞ்ச ஒழிப்பு எஸ்.பி., விமலா, கூடுதல் எஸ்.பி., புகழ்வேந்தன் மற்றும் போலீசார் வந்திருந்தனர்.பிப்ரவரி, 14, 15ம் தேதிகளில் எங்களிடம் இருந்து தங்கநகைகள், சில பதிக்கப்ப்ட வைர கற்கள், மரகதம், மாணிக்கம், மூன்று சில்வர் பொருட்கள் என, 27 கிலோ எடையுள்ளவற்றை பெற்றுக் கொண்டனர். தமிழக அரசின் உரிமம் பெற்ற நகை மதிப்பீட்டாளர் பிரபாகரன், இந்த பணியில் ஈடுபட்டார். நகைகளின் மதிப்பு, 60 கோடி ரூபாய். திருப்பி கொடுக்கப்பட்ட நகைகளில் இரண்டு கிலோ ஒட்டியாணம், ஒரு கிலோ கிரீடம், ஒன்றரை கிலோ தங்க கத்தி, 60 கிராம் எடையுள்ள தங்க பேனா, தங்க கைகடிகாரம், தங்க வாள் முக்கியமானவை.

* சொகுசு பஸ்

கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த நில ஆவணங்கள், பெட்டிகளில் இருந்த 2 லட்சத்து 20 ஆயிரத்து 384 ரூபாய் மதிப்புள்ள, பழைய ரூபாய் நோட்டுகளை திரும்ப ஒப்படைத்து உள்ளோம். ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, 10 கோடியே 18 லட்சத்து 78 ஆயிரத்து 591 ரூபாய் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. அந்த தொகை தமிழக வங்கிகளில் கணக்கில் உள்ளது.அதை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டு உள்ளார். சொத்து குவிப்பு தொடர்பான விசாரணையின் போது, பறிமுதல் செய்யப்பட்ட டி.என்09 எப்02575 என்ற சொகுசு பஸ் தற்போது, சென்னை சிறப்பு விசாரணை குழு கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பஸ்சுக்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை. அந்த பஸ்சை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை, தமிழக அரசு தன் வங்கிக்கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

* ரூ.13 கோடி

தமிழகத்தின் சென்னை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர், துாத்துக்குடி என, ஆறு மாவட்டங்களில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான, 1,512.16 ஏக்கர் நில ஆவணங்களையும் ஒப்படைத்து உள்ளோம். நாங்கள் திருப்பி ஒப்படைத்து உள்ள நகைகள், சொத்து ஆவணங்களை தமிழக அரசு பொது ஏலம் விடலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வழங்கலாம். அது, அரசின் முடிவை பொறுத்தது. நகைகளை ரிசர்வ் வங்கியில் தற்போதைய மார்க்கெட் நிலவரத்திற்கு விற்றுக் கொள்ளலாம்.சொத்து குவிப்பு வழக்கில் முன்னர் கூறப்பட்ட தீர்ப்பின் போதே, கர்நாடக அரசுக்கு, 5 கோடி ரூபாய் செலவானது. தற்போது வழக்கு தொடர்பான மேலும் சில வழக்கு விசாரணைக்காக, கூடுதலாக, 8 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. மொத்தம், 13 கோடி ரூபாய். இந்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த போது, சசிகலா, இளவரசி தலா 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்தினர். மொத்தம் எங்களிடம், 20 கோடி ரூபாய் உள்ளது. அதில், 13 கோடி ரூபாயை கழித்து விட்டு, ஏழு கோடி ரூபாயை தமிழகத்திடம் வழங்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். பெட்டியில் இருந்து ஐந்து சேலைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த சேலைகள், ஜெயலலிதாவுக்கு யாரோ பரிசாக அளித்தவை. அவற்றை மதிப்பிடவில்லை.

11,000 சேலைகள்

ஜெயலலிதாவின், 11,000த்துக்கும் மேற்பட்ட சேலைகள், அவர் பயன்படுத்திய செருப்புகள் உள்ளிட்டவைகளும் நம்மிடம் இருப்பதாகவும், திரும்ப ஒப்படைக்க போவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகின. அதில் உண்மை இல்லை. எங்களிடம் இருந்தவை நகைகள், நில ஆவணங்கள் மட்டும் தான்; அவற்றை ஒப்படைத்து விட்டோம். அத்துடன் இந்த வழக்கு முடிந்து விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

தற்போதைய மதிப்பு, 56.53 கோடி ரூபாய்

கடந்த, 1996ல் நகைகளை பறிமுதல் செய்த போது, அதன் மதிப்பு, 3.47 கோடி ரூபாய். தற்போதை மதிப்பு, 56.53 கோடி ரூபாய். 1,562 ஏக்கர் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், 1,000 ஏக்கர் நிலத்திற்கு தான் ஆவணங்கள் உள்ளன. 562 ஏக்கர் நிலத்திற்கு சரியான ஆவணம் இல்லை. ஒரே நிலத்தை பல முறை பதிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. 1,000 ஏக்கர் நிலமும், நகைகளின் மதிப்பும், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. நகை, பணத்தை விற்றால் தமிழக அரசுக்கு மிக பெரிய லாபம் கிடைக்க போவது உறுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

Tetra
பிப் 22, 2025 19:38

அவர் உழைத்து சம்பாதித்தார் . இந்த திருடர்களை போல் அல்ல. பொய் வழக்கு போட்டு அவரை‌ நாசம்‌ செய்துள்ளார்கள். அவர் கூடவே இருந்து குழி பறித்தவர் வாழ்ந்து விட்டாரா? இந்த கூட்டமும் ஒரு நாள்‌ ஒழியும். செய்த செய்யும் பாவங்கள் எல்லாம் ஒரு மொத்தமாக உருவெடுக்கும். தலையில் விடியும்.


sethu
பிப் 19, 2025 08:53

கருணாநிதி சொத்துக்களை விற்றால் பல லட்சம் கோடிகள் அரசுக்கு கிடைக்குமே. அதையும் எழுதுங்கள்


SRITHAR MADHAVAN
பிப் 18, 2025 15:09

தமிழகத்திற்கு அம்மா ஜெயலலிதா மட்டுமே. திமுக அரசால் மறுக்க முடியாது. அவர் முதலமைச்சராக இருந்தபோது பசியை நீக்கினார் அம்மா உணவகம். அவர் உயிருடன் இல்லாத போது, ​​திமுக அரசு நிதி நெருக்கடியில் இருக்கும் போது, ​​தமிழக அரசுக்கு கொடுத்து வருகிறார். அவ்வளவுதான்.


VSMani
பிப் 17, 2025 14:18

முதலாவதாக இதற்கு நாம் அணைவரும் கலைஞருக்கும் அன்பழகன் அவர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். ஏனெனில், அவர்கள்தான் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு போட்டு அவரிடம் இருந்து தங்கம், வெள்ளி, வைர நகைகள், நில பத்திரங்களை பறிமுதல் செய்யவைத்தனர். இல்லாவிடில், ஜெ கொள்ளையடித்து சேர்த்த இத்தனை கோடி பணம்களும் சசிகலாவுக்கு சென்றிருக்கும்.


sethu
பிப் 19, 2025 08:58

மனசாட்ச்சிப்படி எழுதுங்கள் உங்கள் மனதில் நேர்மைக்கும் கொஞ்சம் இடம் கொடுக்க வாழ்த்துக்கள் .


VSMani
பிப் 17, 2025 14:06

"மக்ககளால் நான் மக்களுக்காக நான்" என்று சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றி, தமிழக மக்களின் வரிப் பணத்தில் இத்தனை ஆயிரம் கோடிகள் பணத்தை கொள்ளையடித்து சேர்த்து என்ன பிரயோஜனம். இவ்வளவு பணத்திற்கு தமிழ்நாட்டில் எத்தனையோ தொழிற்சாலைகள் தொடங்கி ஏழை மக்களுக்கு வேலை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி இருந்தால் எத்தனையோ குடும்பங்கள் 3 வேளை பசியாற உணவு உண்டிற்குமே. அத்தனை குடும்பம்களும் மனதார வாழ்த்தி இருக்குமே. சாகும்போது எதையும் கொண்டுபோக முடியாத இந்த பணத்தால் இந்த அம்மையாருக்கு கிடைத்த பட்டம் "திருடி கொள்ளைக்காரி ". காமராஜரும் இந்த மண்ணில்தான் வாழ்ந்தார் முதல்வராக இருந்தார் அவர் இறக்கும்போது அவரிடம் இருந்தது 2 கதர் வேஷ்டி 2 காதர் சட்டை. அவருக்கு கிடைத்த பட்டம் "கல்விக்கண் திறந்த பகலவன்" இந்த அம்மையாருக்கு வாரிசு இல்லாததால் இவரின் ஊழல் வெளியே வந்தது. அப்படி என்றால், கலைஞருக்கு எத்தனை ஆயிரம் கோடிகள் சொத்து இருக்கும் கலைஞரின் வாரிசுகளுக்கு எத்தனை ஆயிரம் கோடிகள் சொத்து இருக்கும். இதிலிருந்து ஓன்று புரிகிறது. எத்தனை அரசியல்வாதிகளும் தமிழ் நாட்டை கொள்ளையடித்தாலும் தமிழ்நாடு தாங்கும். உலக வங்கியில் கோடிக் கணக்கில் தமிழ்நாட்டிற்கு கடன் வாங்கிவிட்டு எல்லா பணத்தையும் மக்கள் நலத்திட்டம்கள் என்கிற பெயரில் கொள்ளையடிக்க வேண்டியது. அதற்காகத்தானே, பெரிய படிப்பு ஒன்றும் படிக்காவிட்டாலும், எப்படியாவது ஆட்சியைப் பிடித்து அரியணை ஏறத்துடிக்கிறார்கள் மகாப்பெரிய பாவிகள். இப்படிப்பட்டவர்களையும் பத்திரிகைகள் போற்றுகிறார்கள் புகழ்கிறார்கள் வாழ்த்துகிறார்கள் வணங்குகிறார்கள்.


Easwar Kamal
பிப் 17, 2025 00:37

ஜெய நகை எல்லாம் மத்திய அரசின் கரு ஊலத்துக்கு செல்ல வேண்டும். தமிழக அரசுக்கு சென்றால் இந்த தமிழக அரசியல் வாதிகளே பிரித்து கொள்வார்கள். என்ன ஆச்சரியமா இருக்கு இந்த பாபு அமைச்சர் எங்கும் தென் படவில்லை.


Bala
பிப் 17, 2025 00:32

இதெல்லாம் என்ன பெரிய ஜுஜுபி. எங்க சின்ன தத்தியிடம் மட்டுமே முப்பதாயிரம் கோடி இருப்பதாக அவர் கட்சிக்காரர் சொன்னது


Madhavan
பிப் 16, 2025 21:49

சுப்ரீம் கோர்ட்டின் இறுதித் தீர்ப்பின்படி நெ.1 குற்றவாளியின் சொத்துக்கள் யாவும், ரொக்கப் பணம், நில தஸ்தாவேஜுகள் மற்றும் தங்கம், வெள்ளி, வைர நகைகள், அசையா சொத்துக்கள் யாவும் மத்திய‌ ரிசர்வ் வங்கியிடம் தேசிய சொத்தாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. மற்றபடி ஃபர்னிச்சர்கள், அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கார்கள் முதலியவறை தமிழக அரசு ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை தமிழக அரசாங்க கஜானாவில் சேர்க்கலாம்.


Mediagoons
பிப் 16, 2025 20:59

தமிழக அரசு இதற்காக தவம் இருக்கவில்லை . பாராளுமன்றத்திலோ அல்லது புனித ஸ்தலமான பிரயாக்ராஜிலோ மிகப்பெரிய மணிமண்டபம் கட்டி மியூசியத்தில் வைத்துக்கொள்ளலாம்


KRISHNAN R
பிப் 16, 2025 19:50

அணில்,, குரங்கு போன்றவற்றால்... பாதிப்பு வராமல் இருக்கணும்


வீரபாண்டி,அலங்காநல்லூர்
பிப் 17, 2025 00:48

குரங்கு கையில் பூ மாலையை கொடுத்தது போல் ஜெ வின் நகையை இந்த திராவிடமாடல் அரசிடம் நீதிமன்றம் கொடுத்து இருக்கிறது இதற்கு பேசாமல் அந்த நகையை மத்திய அரசிடம் கொடுத்து அதை விற்று வரும் பணத்தை ஏழை மக்களுக்கு கொடுக்க சொல்லியிருக்க வேண்டும்.உச்சநீதிமன்றம் வரை திமுகவின் ஆட்கள் இருக்கிறார்கள் இது அநியாயமான தீர்ப்பு


SRITHAR MADHAVAN
பிப் 18, 2025 15:12

எறும்பு கையில் கொடுத்த நகைகளை உண்ணக்கூடாது. கரையன் இரும்பு பெட்டிகளை சாப்பிடக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை