உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 மாதத்தில் 145.7 டி.எம்.சி., காவிரி நீர் தந்த கர்நாடகா

2 மாதத்தில் 145.7 டி.எம்.சி., காவிரி நீர் தந்த கர்நாடகா

சென்னை: கர்நாடகாவில் கொட்டிய தென்மேற்கு பருவமழையால், தமிழகத்திற்கு இரண்டு மாதங்களில், 145.7 டி.எம்.சி., நீர் கிடைத்துள்ளது. 'தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் நீர் வழங்கும் தவணை காலம் துவங்கும். அதன்படி, கடந்த ஜூன் மாதம், 9.19 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்க வேண்டும். கர்நாடகாவில் முன்கூட்டியே இந்த ஆண்டு மே மாதம், தென்மேற்கு பருவமழை துவங்கியது. ஜூனில் கனமழை கொட்டி தீர்த்ததால், அங்குள்ள அணைகள் நிரம்பின. இதனால், தமிழகத்திற்கு 42.2 டி.எம்.சி., நீர் கிடைத்தது. இது ஒதுக்கீட்டு அளவை விட, 33 டி.எம்.சி., அதிகம். ஜூலையில், 31.2 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டும். கனமழை காரணமாக, கர்நாடகா அணைகளில் இருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால், தமிழகத்திற்கு 103.5 டி.எம்.சி., காவிரி நீர் கிடைத்தது. மாத ஒதுக்கீட்டு அளவை விட, 72.3 டி.எம்.சி., நீர் கூடுதலாக கிடைத்தது. இரண்டு மாதங்களில் 40.4 டி.எம்.சி.,க்கு பதிலாக, 145.7 டி.எம்.சி., நீர் கிடைத்துள்ளது. அதாவது, கூடுதலாக 105.3 டி.எம்.சி., நீர், பிலிகுண்டுலு நீரளவை தளத்தை கடந்து தமிழகம் வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Sargam
ஆக 04, 2025 11:46

காவிரி நீரை கர்நாடகா தரவில்லை. மழை அதிகம் பெய்ததால் கர்நாடகாவில் மழைவெள்ள பாதிப்பு ஏற்படுமே என்று கருதி அணைகளை திறந்துவிட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். வருண பகவானுக்குத்தான் தமிழக மக்கள் நன்றிகூறவேண்டும். கர்நாடக அரசுக்கு அல்ல.


Kulandai kannan
ஆக 04, 2025 18:56

வேண்டுமானால் கர்நாடகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக அந்த உபரி நீரை குடிக்காதீர்.


venugopal s
ஆக 04, 2025 10:56

இது அவர்கள் கொடுத்த நீர் அல்ல,கர்நாடக அணைகள் நிரம்பியதால் மேலும் சேமிக்க முடியாமல் திறந்து விட்ட நதி நீர்!


Murugesan
ஆக 04, 2025 11:34

இந்த 70 வருட திராவிட திருடனுங்க ஆட்சியில என்னத்த கிழித்தார்கள் ஓரு தடுப்பணைகள் கூட கட்டாமல் ,நீர் மேலாண்மை செய்ய வக்கற்ற ஊழல் அயோக்கியனுங்க, மேட்டூர் அணையை தூர் வாராமல் பொய் கணக்கு எழுதி வாயில போட்ட கேவலமானவர்கள்


vivek
ஆக 04, 2025 11:44

உனக்கு அறிவு அறிவு....


gunasekaran
ஆக 04, 2025 10:54

காவிரியில் உபரி நீர் திறந்துவிப்பட்டுள்ளது.அந்தந்த காலத்தில் தர வேண்டிய நீரை திறந்தால்தான் சரியானது.


Haja Kuthubdeen
ஆக 04, 2025 10:39

எத்தனை டி எம் சி கொடுத்து என்ன பயன்.நாகையில் கடைகோடி பகுதி நீரிண்றி வரண்டு கிடப்பதா மலரில் இன்று செய்தி...


Venkataraman
ஆக 04, 2025 10:32

தமிழகத்துக்கு கிடைத்த தண்ணீரில் பாதி கடலில் போய் கலந்திருக்கும். இங்கு தண்ணீரை சேமித்து,வைக்க ஒரு அணை கூட கட்டப்படவில்லை. காமராசர் இருந்தபோது கட்டிய அணைகளை தவிர புதிதாக ஒரு அணை கூட புதிதாக கட்டப்பட வில்லை.


என்னத்த சொல்ல
ஆக 04, 2025 11:55

தப்பா சொல்றீங்க. காமராஜர் காலத்தில் 15 அணைகள் கட்டப்பட்டன.. திமுக ஆட்சியில் 42 அணைகள் கட்டப்பட்டுள்ளன.. data check பண்னுங்க.. தெரியாம சொல்லாதீங்க..


shyamnats
ஆக 05, 2025 08:32

கர்நாடகாவில் முன்கூட்டியே இந்த ஆண்டு மே முதல் , ஜூனில் வரை கனமழை கொட்டி தீர்த்ததால், அங்குள்ள அணைகள் நிரம்பின. அவற்றின் பாது காப்பு கருதி உபரி நீரை திறந்து விட்டார்கள். செய்தி தலைப்பு , ஏதோ கர்நாடக அரசு கருணை காட்டி திறந்து விட்டது போல் தோற்றத்தை தருகிறது. இங்கோ தமிழகத்தில் 45000 ஏரி குளங்கள் இருந்த இடத்தில் 18000 மட்டுமே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவையும் முறையான பராமரிப்பின்றி மரித்து கொண்டிருக்கின்றன. எனவே கிடைத்த உபரி நீரும் வீணாய் போய் சேர்ந்தது. அரசு நிர்வாகம் மேம்பட வேண்டும்.


MUTHU
ஆக 04, 2025 10:07

ஆனால் கர்நாடகா இதனை குறித்து வைத்துக்கொண்டு தமிழ்நாடு தண்ணீர் தேவைக்கு அதிகமாய் கொண்டுள்ளது அதனால் வீணடிக்கின்றது எனக்காவது அணை கட்ட அனுமதி கொடும்பா.


D Natarajan
ஆக 04, 2025 08:19

வேறு வழியில்லை, திறந்து விட்டுத் தான் ஆக வேண்டும். ஆனால் தமிழ் நாட்டில் சேமிக்க வழியில்லை, எனவே கடலுக்கு திறந்து விட்டுட்டோம் . ஒரு வழி ஏன் தமிழ் நாடு மேகதாத்து அணையை கட்டி, சேமித்த தண்ணீரை தமிழ் நாட்டுக்கு பயன்படுத்தக்கூடாது


R.RAMACHANDRAN
ஆக 04, 2025 07:27

தலைப்பு இயற்கைக்கு நன்றி செலுத்துவதற்கு பதிலாக தண்ணீர் திறந்து விட மனமில்லாத கர்நாடக அரசுக்கு நன்றி செலுத்துவது போல உள்ளது.அவர்கள் மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட்டு அவர்கள் அணைகளை காலியாக வைத்திருந்து இருந்தால் மழை நீர் வீணாக கடலில் கலந்திருக்காது.இதனை உணர விரும்பாத அவர்கள் மற்றவர்கள் மீது பழி சமத்துவத்தை நிறுத்த மாட்டார்கள் மேகதாது ஆணை கட்டும் வரை.


ரங்ஸ்
ஆக 04, 2025 06:46

இதென்ன ஆச்சரியம். மழை அதிகம். வேறு வழியில்லை. திறந்து விட்டார்கள்.


Natarajan Ramanathan
ஆக 04, 2025 06:42

ஆத்துநிறைய தண்ணீர் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அதை அப்படியே கடலுக்கு அனுப்பிவிட்டு , பா..சிச பாஜக அரசே, காவிரி நீரை வாங்கிக்கொடு என்று அடுத்தமாதம் கதறல் சத்தம் கேட்கும்.


Haja Kuthubdeen
ஆக 04, 2025 10:43

உண்மையா ரொம்ப அழகா சொல்லிட்டீங்க...மோடி மேலயும்..கர்நாடகா மீதும் பழிய போட்டுட்டு ஜெயிச்சுடுவானுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை