உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசை விமர்சித்து பேசிய கார்த்தி எம்.பி.,: பேசவிடாமல் நிறுத்திய பா.ஜ., கட்சியினர்!

மத்திய அரசை விமர்சித்து பேசிய கார்த்தி எம்.பி.,: பேசவிடாமல் நிறுத்திய பா.ஜ., கட்சியினர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காரைக்குடி: அம்ரித் பாரத் திட்ட நிகழ்ச்சியில், மத்திய அரசை விமர்சித்து பேசிய கார்த்தி எம்.பி.,க்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.,வினர் 'பாரத் மாதா கீ ஜெய்' என கோஷமிட்டனர். கார்த்தி எம்.பி., யை வெளியேறச் சொல்லி பாஜ.,வினர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. டில்லியில் இருந்து காணொளி வாயிலாக, அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.41 ஆயிரம் கோடி மதிப்பில், 554 ரயில் நிலையங்களை மறு சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இது தொடர்பான நிகழ்ச்சி காரைக்குடியில் நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9fka9e2v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்தி எம்.பி., பேசுகையில்,‛‛ மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து நாம் ரூ.1 வரி கட்டினால், 29 காசு தான் திரும்ப வருகிறது. ஆனால், உத்தர பிரதேசத்தில் ரூ.1 கட்டினால் ரூ.2.73 திரும்ப கிடைக்கிறது'' எனக் குறிப்பிட்டார்.இதனால், ஆத்திரமடைந்த பாஜ.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜ.,வினர் அரசு விழாவில் அரசியல் பேசக்கூடாது என்றும், உங்கள் குடும்பம் என்ன செய்தது என்றும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து பா.ஜ.,வினர் 'மோடி வாழ்க' என்றும் 'கோ பேக் கார்த்தி', 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிட்டனர். இதையடுத்து கார்த்தி எம்.பி., தனது பேச்சை முடித்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ