உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார்த்தி சிதம்பரத்துக்கு அறுவை சிகிச்சை

கார்த்தி சிதம்பரத்துக்கு அறுவை சிகிச்சை

சென்னை:சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி சிதம்பரத்துக்கு, சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி காங்., -- எம். பி.,யுமான கார்த்தி சிதம்பரம், 53, ஜீரண மண்டல பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு சிகிச்சை பெற, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் அனில் பி.ஜி. வெளியிட்ட அறிக்கையில், 'கார்த்தி சிதம்பரம் எம்.பி.,க்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. டாக்டர் சந்தோஷ் ஆனந்த் தலைமையிலான மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது. தற்போது நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை