உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் பேராசிரியர் செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழி தமிழ் விருது

தமிழ் பேராசிரியர் செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழி தமிழ் விருது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:சென்னை பல்கலை முன்னாள் தமிழ் பேராசிரியர் செல்வராசனுக்கு, கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.மறைந்த கருணாநிதி தன் சொந்த நிதி, ஒரு கோடி ரூபாயை, வைப்புத் தொகையாக வைத்து, கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளையை, 2008ல் நிறுவினார். அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும், 'கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்கப்படுகிறது. விருதாளருக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் மற்றும் கருணாநிதி சிலை வழங்கப்படும். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழி பெயர்ப்பு, நுண்கலைகள் போன்ற துறைகளில் செம்மொழி தமிழாய்வுக்கு, சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள அறிஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.அதன்படி, 2024ம் ஆண்டு விருதுக்கு, சென்னை பல்கலை முன்னாள் தமிழ் பேராசிரியர் செல்வராசன் தேர்வு செய்யப்பட்டார். இவர், 'பாரதிதாசன் ஒரு புரட்சி கவிஞர்' என்ற பொருளில், சென்னை பல்கலையில் ஆய்வு நடத்தி, முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்நுாலுக்கு, தமிழ் வளர்ச்சித் துறை, முதல் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளது. அவருக்கு கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை, முதல்வர் ஸ்டாலின், நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன், தலைமை செயலர் முருகானந்தம், செய்தித்துறை செயலர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அருள், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத்தலைவர் சுதா சேைஷய்யன், இயக்குனர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rpalnivelu
நவ 09, 2024 18:59

புலிட்ஸ்ர் விருதுக்கு சமமான விருது இந்த விருத பழைய பேப்பர் கடையில போட்டு இப்பவே காசு பாத்துடுங்க


Murthy
நவ 09, 2024 16:59

கருனாநிதிக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் . .......திராவிட தெலுங்கர் விருது என்று மாற்றி கொள்ளலாம் .


ஆரூர் ரங்
நவ 09, 2024 08:56

அடுத்து பாரதிதாசன் குயில் இதழில் அண்ணாதுரை, பற்றி கூறியிருந்த கருத்துக்களையும் ஆராய்ச்சி செய்யலாம்.


தமிழ்வேள்
நவ 09, 2024 10:53

காஞ்சிபுரம் பொன்னப்பாவின் வாரிசுகள் மட்டும் என்ன குறைந்தவர்களா ? அவர்களுக்கும் ஒரு தகுந்த பரிசு வழங்கவேண்டும் ..அந்த திண்ணையை கூட ஒரு நினைவு சின்னம் ஆகிவிடலாம் ..


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2024 08:44

ஏணுங்க இந்த விருதாளருக்கு எம் எல் எ சீட் கொடுப்பாங்களா?


Shekar
நவ 09, 2024 07:09

இவரும் எழுதுபவரோ


Kasimani Baskaran
நவ 09, 2024 07:09

கோபாலபுரத்தையே மருத்துவமனைக்கு கொடையாக கொடுத்த கருணாநிதிக்கு சொந்தமாக எதுவும் கிடையாது. பிறகு எப்படி சொந்தமாக ஒரு கோடி நிதி மட்டும் வந்தது. அவரது நற்ப்பெயருக்கு களங்கம் கற்ப்பிக்க அதிமுகவின் சதி செய்வது போல தெரிகிறது.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2024 08:43

ஒரு கோடி முதலீட்டுக்கு எந்த வங்கியில் ஆண்டுக்கு பத்து லட்சம் வட்டி கொடுக்கிறார்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2024 12:50

ஒருவேளை நம்ம கலீஞருக்கு பிடித்த Fruits & Veges Company Of India Limited என்ற கம்பெனியில ஒரு கோடி முதலீடு செஞ்சா வருஷா வருஷம் பத்து லட்சம் கொடுப்பாங்க போல இருக்கு.


Srinivasan Narasimhan
நவ 09, 2024 04:51

தந்தையின் பெயரில் விருது தனது ஜால்ராக்களுக்கு பதவி அப்போ இது என்ன தினிப்பு


புதிய வீடியோ